ஆஸ்திரேலியாவின் பல்லின கலாச்சார பிரதிபலிப்பின் முகமாக இருக்கும் SBS ஊடகத்தின் Elder-in-Residence எனும் பதவியில் இருந்தவரும், Widjabul Wia-bal எனும் பூர்வீக குடிமக்களின் சமூகத்தைச் சேர்ந்தவரும், ஆஸ்திரேலியாவின் மிகவும் முக்கிய First Nations எனப்படும் பூர்வீக குடிமக்களின் கலை மற்றும் பண்பாட்டு ஆளுமையாகவும் அறியப்பட்ட Auntie Rhoda Roberts, அவர்கள் காலமானார். அவருக்கு வயது 66.
மிக அரிதான ovarian cancer கருப்பை புற்றுநோயுடன் குறுகிய காலம் போராடிய அவர், மார்ச் 21 ஆம் தேதி – சனிக்கிழமை பிற்பகல், தனது பூர்வீக நிலத்தில், தனது குடும்பத்தினர் சூழ இருந்த நிலையில் உயிர் துறந்தார்.
அவரது வாழ்க்கையையும், நீடித்துவரும் அவரின் மரபையும் கௌரவிக்கும் வகையில், அவரது படங்களையும், குரல் பதிவுகளையும் ஒளிபரப்ப அல்லது ஒலிபரப்ப அவரது குடும்பம் SBS-க்கு அனுமதி வழங்கியுள்ளது.
எழுத்தாளர், நடிகை, இயக்குநர், கலைத் தயாரிப்பாளர் எனப் பல துறைகளில் தடம் பதித்தவர் ரோடா ராபர்ட்ஸ். performing arts துறைக்கு அவர் செய்த சேவைக்கும், மேடை மற்றும் திரை உலகிற்கு உள்ளும் புறமும் அவர் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்திற்கும், அவருக்கு 2016ஆம் ஆண்டு Order of Australia எனும் ஆஸ்திரேலிய அரசின் உயர் விருது வழங்கப்பட்டது.
பூர்வீக குடிமக்களில் “Auntie” என்ற மரியாதையை ஒருவர் பெறுவது அதீத கவுரமானது. அந்த தகுதியை பெறுவதற்கு தன்னுடைய பாதையைத் தானே செதுக்க வேண்டியிருக்கும் என்பதை வாழ்க்கையின் துவக்கதிலிலேயே தான் உணர்ந்திருந்தேன் என்று ரோடா ராபர்ட்ஸ் ஒரு முறை கூறியிருந்தார்.
"50 years ago, at 16. I was asked about my dream. I said I wanted to be a writer, a journalist. And I was told I was a dreamer."
ரோடா ராபர்ட்ஸ் தனது 16 வயதில் ஒரு எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் ஆக வேண்டும் என்று கனவு கண்டார். அவர் அதை அவர் வெளியில் கூறியபோது அது வெறும் கனவாகத்தான் பார்க்கப்பட்டது.
ஆஸ்திரேலிய இனவெறி சூழலில், ஒரு பூர்வீக குடி மகளின் எழுத்தாளர் Journalist ஆகவேண்டும் எனும் கனவு நனவாக முடியாது என்று அவரது குடும்பத்தினருக்கு கவலை இருந்தது.
ஆனால் காலம் அந்த கவலையை புறந்தள்ளியது - கனவு மெய்யானது. முடியாது என்ற வார்த்தை அவரிடம் இல்லை என்பதை ரோடா ராபர்ட்ஸ் நிரூபித்தார். ஆஸ்திரேலிய பிரதமரே ஒருநாள், ரோடா ராபர்ட்ஸ்க்கு நன்றி தெரிவிப்பார் என்று அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் Anthony Albanese ரோடா ராபர்ட்சை கௌரவித்தார்.
"Rhoda, thank you so much. For everything you have created, inspired and shared. We honour your extraordinary career and the pathway you've carved for all who follow you."
ரோடா ராபர்ட்ஸ் 1970களில் nurse ஆகப் பயிற்சி பெற்றார். 1980களின் ஆரம்பத்தில் லண்டனில் பணியாற்றினார். பின்னர் சிட்னிக்கு திரும்பிய அவர் performing arts படித்தார். அதன் பின் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நாடகங்களில் நடித்த ஆரம்பித்தார்.
"I saw you playing footy this afternoon.." "You were being told lies"
"Let me tell you, we're on for a bit of a ride."
தயாரிப்பாளர், இயக்குநர், நடிகை என பல முகங்கள் கொண்ட கலைவாழ்க்கைக்குள் அவரை காலம் எளிதாக உள்வாங்கிக்கொண்டது.
கனவின் மேல் இன்னொரு கனவு என்று - காலம் அவருக்கு கலை உலகின் உச்சத்திற்க்கு அவரை கொண்டு சென்றது.
ஆஸ்திரேலியாவின் முதல் Aboriginal prime-time television presenter என்ற வரலாற்றையும் ரோடா ராபர்ட்ஸ் படைத்தார். 1989ஆம் ஆண்டு அவர் பூர்வீக குடி பின்னணி கொண்ட முதல் தொலைக்காட்சி நிகழச்சி படைப்பாளர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.
"Good evening, I'm Rhoda Roberts... and I'm Michael Johnson. Welcome to First in Line."
"By the time marches reached the local member's office, Barry Steggal, it became quite obvious and all too clear, the racist attitudes and racial division that had occurred in Swan Hill over the development site."
SBS தனது 50ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி தயாரித்த நிகழ்ச்சியில், தனது ஆரம்ப கால அனுபவங்களை Auntie Rhoda அவர்கள் இப்படி நினைவுகூர்ந்திருந்தார்.
"Hearing those first radio shows that began at SBS and then walking into Milsons Point where we used to have our office and then going into that studio where so many groundbreaking shows were being put to air, was pretty astounding."
தொலைக்காட்சியில் அவர் நிகழ்ச்சியாளரானது Rhoda Roberts வாழ்க்கையில் உருவாக்கிய பல “முதல்” எனும் சாதனைகளில் ஒன்று மட்டுமே - ஏனெனில் பூர்வீக குடி மக்களில் முதன் முதலாக எனும் தலைப்பு அதன் பிறகு அவருக்கு பல முறை கிடைத்தது.
எதிர்பார்ப்புகளை மீறியது அவரின் வாழ்க்கை - ஆனால் அது துயரத்தையும் சுமந்த வாழ்க்கையும் கூட.
1998ஆம் ஆண்டு, அவரின் இரட்டைச் சகோதரி Lois, New South Wales மாநிலத்தின் Lismore பகுதியில் கொலை செய்யப்பட்டார். Hitch-hiking சென்றபோது Lois மாயமானார். அவரைக் கொன்றவர் யார், ஏன் கொன்றார்கள் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. சகோதரி Loisயின் திடீர் மறைவைத் தொடர்ந்து Lois-ன் குழந்தைகளை ரோடாவும் அவரது தாயாரும் இணைந்து வளர்த்தனர்.
ஆஸ்திரேலியாவின் முதல் தேசிய Aboriginal theatre company-யை இணைந்து நிறுவினார் ரோடா ராபர்ட்ஸ். Festival of Dreaming-ஐ உருவாக்கி வழிநடத்தினார். மட்டுமல்ல Sydney Opera House-இல் First Nations Programming – பூர்வீக குடிமக்களின் நிகழ்ச்சி பிரிவின் தலைவராக ஒரு தசாப்த காலம் பணியாற்றினார் Rhoda Roberts.
Sydney Olympics தொடக்க விழாவில் அரங்கேறிய Awakening எனும் பூர்வீக குடி மக்களின் பின்னணி கொண்ட நிகழ்ச்சியின் தயாரிப்பும், அவரை உலகளவில் கவனிக்க வைத்தது.
ரோடா இன்னும் ஒரு கனவுக்காரி தான். ஆனால் அவர் தனது கனவுகளை மட்டும் அல்ல, தனது மக்களின் கனவுகளையும், கதைகளையும் சுமந்தவர் – அவற்றை உலகுடன் பகிர்ந்து கொண்டவர்.
பூர்வீக குடிமக்களில் Widjabul Wia-bal Bundjalung எனும் சமூகத்தைச் சார்ந்த பெண்மணியான அவர், தனது மரபையும், மொழியையும், அடையாளத்தையும் தனது ஒவ்வொரு பணியிலும், கலைப் படைப்பிலும் மையமாக வைத்திருந்தார். இயக்குநராக இருந்தபோதும் அதே உறுதியில் வைராக்கியத்தோடு செயல்பட்டவர்.
"I was able to employ language interpreters, and we were able to translate one of the most studied plays in the western world, Waiting for Godot, or Nundalaya Godot Gay into the Bundjalong language. And for me, that was something that had never been done."
மேற்கத்திய உலகில் அதிகமாக ஆய்வு செய்யப்பட்ட நாடகங்களில் ஒன்று Waiting for Godot. இந்த நாடகத்தை Bundjalung மொழியில் மொழிபெயர்த்து அந்த நாடகத்தை அரங்கேற்றினார். இது அவர் உருவாக்கிய புதிய பண்பாட்டு முன்னேற்றங்களில் ஒன்றாகும்.
ரோடா ராபர்ட்ஸ் அவர்கள் எந்தெந்த இடங்களில் புதிய வழிகளைத் திறந்தார் என்பதை முழுமையாகப் பட்டியலிடுவது சாத்தியமற்றது. ஏனெனில் ரோடா ராபர்ட்ஸ் அவர்கள் 2016ஆம் ஆண்டு மதிப்பு மிகு Order of Australia விருது பெற்றதற்கு முன்பும், விருது பெற்ற பின்பும் என்று பல ஆண்டுகளாக முக்கிய பண்பாட்டு மரபுகளை இந்த தேசத்தில் உருவாக்கியவர் என்று மதிக்கப்படுகிறார்.
ஆஸ்திரேலியாவில் இப்போது acknowledgement மற்றும் “Welcome to Country” எனும் நடைமுறைகள், ஒரு நிகழ்வின் தொடக்கத்தில், மேலும் அந்த நிலத்தின் பாரம்பரிய உரிமையாளர்களான பூர்வீக குடிமக்கள் அந்த நிலத்துக்கு பிறரை முறையாக வரவேற்ப்பதை குறிக்கும் ஒன்று. இப்படி பொது நிகழ்ச்சிகளில் பூர்வீக குடிமக்களை அங்கீகரிக்கும் acknowledgement என்ற மரபை ஆரம்பித்ததற்கும், “Welcome to Country” என்ற சொற்றொடரை உருவாக்கியதற்கும் ரோடா ராபர்ட்ஸ்ஸே அடிக்கல் நாட்டியவர் – இந்த முறையை துவங்கிவைத்தவர் என்பது அவரின் தனிப்பெருமைகளில் ஒன்று.
1980களில் Aboriginal National Theatre Trust-ஐ அவர் வழிநடத்திய காலத்தில், பூர்வீக சமூகங்கள் மத்தியில் இருந்த இந்த நடைமுறையை பரந்துபட்ட கலை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற அவரின் எண்ணத்திலிருந்தே இது உருவானது.
ரோடா ராபர்ட்ஸ் AO அவர்கள் SBS ஊடக நிறுவனத்தின் Elder-in-Residence ஆகவும் பணியாற்றினார். 2022ஆம் ஆண்டு NITV-யிடம் அவர் பேசியபோது, First Nations – பூர்வீக குடிமக்களுக்கான புதிய காலம் உருவாகிக் கொண்டிருப்பதாக அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.
"We are actually being heard. We have platforms now where we can voice our opinions. And I guess, you know, we wanted to report news like every other news service, of course. You know, here has to be a certain distance, there has to be the story told and the balance of the story. But I think now, more and more Australians are coming, or becoming aware that First Nations culture is a thriving culture. It is ancient, but it also fits in this world."
ரோடா ராபர்ட்ஸ் எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் ஆக வேண்டும் என்ற தனது கனவை நிஜமாக்கி பல ஆண்டுகள் கழித்தும், 2025ஆம் ஆண்டில் கூட அவர் பல துறைகளில் தொடர்ந்து வேகமாக செயல்பட்டுக்கொண்டிருந்தார்.
ரோடா ராபர்ட்ஸ் அவர்களின் கலைப் படைப்பில் முக்கியமான ஒன்று - அவரது ஒரேநபர் மேடைநாடகமான My Cousin Frank.
அந்த நாடகம், அவரது குடும்பத்தின் மற்றொரு சிறப்புமிக்க உறுப்பினருக்கு அளிக்கப்பட்ட அஞ்சலியாகும். ஆஸ்திரேலியாவை ஒலிம்பிக்கில் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் பூர்வீக குடி - Aboriginal நபரை நினைவுகூர்ந்ததே அந்த படைப்பு.
2025ஆம் ஆண்டு Sydney Opera House மேடைக்குப் பின்னாலுள்ள dressing room-இல், அவரது குழந்தைகளும், அவரின் துணையும் அவருக்கு அளித்த பாராட்டு அவரால் மறக்க இயலாத ஒன்று. தான் நன்றாக வாழ்ந்தேன் எனும் எண்ணம் தனது வாழ்க்கைக்கு கிடைத்த மிகப் பெரிய சான்று என்று அவர் குறிப்பிட்டார்.
"It means just so much, for our people and our family."
"Mum has always been, kindness, always be kind. And sometimes I've been like, 'no you've got to stand up to people. Don't let people walk all over you'. But at this stage, I see what her kindness has brought her."
"It's just a beautiful play, those aboriginal stories are amazing. I couldn't be more proud of her."
ரோடா ராபர்ட்ஸ் அவர்களின் மறைவு செய்தி கேட்டு SBS ஊடக நிறுவனத் தலைவர் Dr Nicholas Pappas AM வெளியிட்டுள்ள அஞ்சலி செய்தியில், ரோடா ராபர்ட்ஸ் தைரியமான, தொலைநோக்கு கொண்ட தலைமைத்துவத்துடன் செயல்பட்டவர் என்றும், கலாசார பொறுப்புணர்வுடன் ஆஸ்திரேலியாவின் கலை மற்றும் பண்பாட்டு வாழ்வில் அழியாத தடம் பதித்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.
ரோடா ராபர்ட்ஸ் அவர்களின் பங்களிப்பு, - பண்பாடு, நேர்மை, நோக்கம் ஆகியவற்றில் ஒருவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு முன் உதாரணம் – ஒரு அளவுகோல் என்று Dr Pappas கூறியுள்ளார்.
மேலும், பூர்வீக குடிமக்களின் கலாசாரங்களுக்கும், இன்றைய multiculture - பல்பண்பாட்டு ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான இணைப்பை ரோடா ராபர்ட்ஸ் வலுப்படுத்தினார் என்றும், SBS-இன் வரலாற்றில் அவர் என்றும் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்திருப்பார் என்றும் Dr Pappas குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய ஊடகத் துறையில் என்ன சாத்தியமாக இருக்க முடியும் என்பதற்கான எல்லைகளை ரோடா ராபர்ட்ஸ் விரிவுபடுத்தினார் என்றும், அவருடைய தாக்கம் SBS வலையமைப்பையும், தேசத்தின் கலை மற்றும் ஊடகத் துறையையும் இன்னும் பல ஆண்டுகள் வழிநடத்தும் என்றும் Dr Pappas புகழாரம் சூட்டினார்.
(Rhoda Roberts AO: The cultural warrior who changed the nation எனும் தலைப்பில் இடம் பெறும் இந்த விவரணத்தை SBS Newsக்காக தயாரித்தவர் Camille Bianchi; தமிழில் முன்வைப்பவர்: றைசெல்).
