SKIP TO MAIN CONTENT

பணக்காரர்கள் வாழும் Suburbs எவை தெரியுமா?

NSW இல் பணக்கார மற்றும் வறுமையான மக்கள் வாழும் பகுதிகள், வரித்திணைக்களத் தரவுகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளன.

cc
Source: Getty Image

2 min read

Published

Updated

By Praba Maheswaran



Skip to article content

வரித்திணைக்களத்தால் அறவிடப்பட்ட 2015/2016 வரியின் அடிப்படையிலான அவர்களின் மொத்த வருமானத்தை வைத்தே NSW இல் பணக்கார மற்றும் வறுமையான மக்கள் வாழும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

2004/2005ம் ஆண்டுகளில் அதிகூடிய வருவாய் ஈட்டிய மக்கள் வாழும் பிரதேசங்களாக விளங்கிய முதல் 10 Suburbs களில் ஏழு தற்போதும் முதல் பத்தினுள் அடங்குகின்றன. அதேபோல் 2005/06 இல் மிகக் குறைந்த வருமானமீட்டும் 10 Suburbs களில் மூன்று தற்போதும் அதிகுறைந்த பத்தினுள் தொடர்ந்தும் இருக்கின்றன.

தபால் குறியீடு(post code) 2027 உடைய சிட்னியின் Darling Point, Edgecliff மற்றும் Point Piper ஆகிய பகுதிகளே ஆஸ்திரேலியாவில் அதிகூடிய சராசரி வருமானமீட்டும் மக்கள் வாழும் பகுதிகளாகும். அப்பகுதி மக்களின் சராசரி வருட வருமானம் (taxable income) $192,500 ஆகும். இது மெல்பேர்னின் அதிகூடிய வருமானமீட்டும் 3142 தபால் குறியீடுடைய பிரதேசத்தைவிட குறிப்பாக Toorak மற்றும் Hawksburn ஆகியவற்றைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய ரீதியில் கடந்தகாலங்களில் முதல் 10 இடங்களிலிருந்த ஆனால் Woollahra (2025) தவிர்ந்த மற்றைய அனைத்தும் இம்முறையும் முதல் 10 இடங்களினுள் வந்துள்ளன. இம்முறை Woollahra வின் இடத்தை Double Bay (2028) பிடித்துள்ளது.

cc
Source: ATO

தேசிய ரீதியில் அதிகுறைந்த வருமானமீட்டும் மக்கள் வாழும் பதியாகத் தொடர்ந்தும் இரண்டாவது தடவையாக NSW விலுள்ள Narrabri க்கு அருகாமையிலுள்ள 2387 எனும் தபால் குறியீடுடைய பிரதேசம் விளங்குகிறது. அவ்விடத்து மக்களின் கடந்தகால சராசரி வருமானம் $8832. ஆனால் தற்போது அவ்வருமானம் $10,000 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய ரீதியில் அதி குறைந்த வருமானமீட்டும் 10 Suburbs களில், VIC

மாநிலத்தின் Watchem உட்பட ஐந்து Suburbs அடங்குகின்றன.

Seven of the top 10 postcodes for average taxable income are in NSW with two Victorian areas (3142) and Portsea (3944) plus the Western Australian area of Cottesloe and Peppermint Grove (6011), which moved up one place from ninth.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now