நேற்று மாலை 6 மணியளவில் ஒருவர் சாலையில் கடுமையாகத் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளி வந்ததை அடுத்து, Sunshine Avenue, St Albans என்ற இடத்திற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.
தாக்கப்பட்ட 24 வயதானவருக்கு அவர்கள் முதலுதவி வழங்கிய போதும், சம்பவ இடத்திலேயே அவர் உயிர் துறந்தார்.
அதனைத் தொடர்ந்து, St Albansஸைச் சேர்ந்த 22, 22 மற்றும் 20 வயதுடைய மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மூவர் மீதும் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இன்று காலை மெல்பேர்ண் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுத்தப்படுவார்கள்.
St Albansஸின் Walters தெருவில் நேற்று மாலை 4 மணியளவில் ஏற்பட்ட இந்த மரணம் சாலையில் சீற்றம் (road rage) காரணமாக நிகழ்ந்தது என்று கூறப்படுகிறது.
தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் அருகிலுள்ள கண்காணிப்புக் கமராக்கள் பல அதனைப் படமாக்கியுள்ளன. அது தவிர, இது குறித்த டாஷ்கேம் (dashcam) அல்லது மொபைல் போன் காணொளிகள் காட்சிகள் எடுத்துள்ளவர்களைத் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கோரியுள்ளது.
