SKIP TO MAIN CONTENT

கார்களின் fog lights-ஐ அணைக்க மறந்தால் அபராதம் எவ்வளவு தெரியுமா?

thinkstock
Source: thinkstock

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

நாம் வாகனம் ஓட்டும்போது வீதி விதிமுறைகளை கவனமாகப் பின்பற்றுவோம். ஆனால் வாகனத்திலுள்ள சில lights-விளக்குகளை தேவையற்ற நேரத்தில் பயன்படுத்தினால் அபராதம் செலுத்த நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம். கார்களின் முன்புறமும் பின்புறமுமுள்ள fog light-களை மூடுபனி மற்றும் மழையான காலநிலையில் வாகன ஓட்டியால் சரியாக பார்க்கமுடியாத சந்தர்ப்பத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் சாதாரண சூழ்நிலைகளில் fog lights-ஐப் பயன்படுத்தினாலோ அல்லது உங்கள் fog light-களை அணைக்க மறந்தாலோ நீங்கள் கீழ்க்காணும் தொகையை அபராதமாக செலுத்த நேரிடும்.

நியூ சவுத் வேல்ஸ்- 110 டொலர்கள்- 2 demerit points

விக்டோரியா- 159 டொலர்கள்

மேற்கு ஆஸ்திரேலியா- 100 டொலர்கள் 1 demerit point

குயின்ஸ்லாந்து- 50 டொலர்கள் 1 demerit point

தெற்கு ஆஸ்திரேலியா- 233 டொலர்கள்

டஸ்மேனியா- 119 டொலர்கள்

Fog light-களை தேவையற்ற நேரத்தில் பயன்படுத்தும் போது,  அவை முன்புறம் மற்றும் பின்புறம் வரும் ஏனைய வாகன ஓட்டுநர்களின் பார்வையைப் பாதித்து விபத்துகளை ஏற்படுத்தக்கூடுமென்பதால் இச்சட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமுலில் உள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now