SKIP TO MAIN CONTENT

Single-use பிளாஸ்டிக்கை தடை செய்யும் முதல் ஆஸ்திரேலிய மாநிலமாகிறது தெற்கு ஆஸ்திரேலியா!

Single use plastics like takeaway straws will be outlawed in South Australia from 2021.
Single use plastics like takeaway straws will be outlawed in South Australia from 2021. Source: Press Association

1 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலியாவில் single-use -ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்யும் முதலாவது மாநிலமாக தெற்கு ஆஸ்திரேலியா திகழ்கிறது.

Straws, cutlery & beverage stirrers போன்ற single-use பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை மற்றும் விநியோகத்தைத் தடை செய்வதற்கான நாடாளுமன்ற ஒப்புதல் நேற்று வழங்கப்பட்டது.

எனினும் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நெருக்கடி நிலை காரணமாக இத்தடை அடுத்த ஆண்டு நடைமுறைக்குவரும் என தெற்கு ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி முதற்கட்டமாக drink stirrers, cutlery, straws ஆகியவற்றுக்கு தடைவிதிக்கப்படும் எனவும், பின்னர் கட்டம் கட்டமாக takeaway containers, coffee cups, fruit & veg barrier bags போன்ற பொருட்களைத் தடைசெய்வது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மாநிலத்தின் சுற்றுச்சூழல் துறைக்கு பொறுப்பான அமைச்சர் David Speirs தெரிவித்தார்.

இதேவேளை பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடைசெய்வதில் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலம் எப்போதும் முன்னுதாரணமாக இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவிலேயே முதற்தடவையாக container deposit திட்டத்தை கடந்த 1977ம் ஆண்டு தெற்கு ஆஸ்திரேலிய மாநிலம் அறிமுகப்படுத்தியிருந்த அதேநேரம், ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கான தடையை 2009ம் ஆண்டு கொண்டுவந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now