தெற்கு ஆஸ்திரேலியாவில் வெள்ள அவசரநிலை அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்த பிந்திய தகவல்கள்.

SA FLOODS

South Australian Premier Peter Malinauskas at Manum in the Riverland region of South Australia, Tuesday, November 22, 2022. Source: AAP / MATT TURNER/AAPIMAGE

தெற்கு ஆஸ்திரேலியாவில் Murray ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், Premier Peter Malinauskas நேற்று அவசரநிலையை அறிவித்தார்.

கடுமையான வானிலை காரணமாக அங்கு ஏற்படும் வெள்ளம் மோசமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Riverlands பகுதிக்கு வெளியேற்ற உத்தரவு விடுக்கப்படும் அதேநேரம் அங்கு மின்சாரம் தடைபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இரண்டாம் பாதி வரை நீர் மட்டம் அதிகமாகவே காணப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியாவில் வெள்ளத் தடைகள் மற்றும் வெள்ள பாதுகாப்பை நிறுவ விரும்பும் தனியார் ஆபரேட்டர்களுக்கு $50,000 வரை மானியம் வழங்கப்படும்.

வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய ஒவ்வொரு குடும்பத்திற்கும் $1,000 நிதி உதவி வழங்கப்படும். முதல் இரண்டு வாரங்களில் அவர்களது புதிய தங்குமிட வசதிக்கென மற்றொரு $1,000 வழங்கப்படும்.

NSW இல், Wakool Junction, Boundary Bend மற்றும் Euston ஆகிய இடங்களில் 1975 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது பதிவானதை விட நீர்மட்டம் தொடர்ந்து அதிகமாக உள்ளது.

Brewarrina, Bourke, Louth, Tilpa, Warren, Mudall, Mulgawarrina, Gongolgon, Jemalong, Hay, Balranald மற்றும் Moulamein ஆகிய இடங்களில் பெரும் வெள்ளம் தொடர்கிறது.

உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, 90 சதவீத Moulamein குடியிருப்பாளர்கள் வெளியேற்ற உத்தரவுகளுக்கு கட்டுப்பட மறுத்துவிட்டனர்.

இப்போது வெளியேறுவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டதாகவும், இவர்கள் மற்ற இடங்களிலிருந்து வாரக்கணக்கில் தனிமைப்படுத்தப்படலாம் என்றும் NSW SES கூறுகிறது.

இதற்கிடையில், Forbesஇல் நீர் மட்டம் குறைந்துவிட்டது, ஆனால் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவது பாதுகாப்பானதா என்பது குறித்து இன்னும் அறிவுறுத்தப்படவில்லை.

இன்று காலை Eugowra இல், பிரதமர் Anthony Albanese மற்றும் NSW Premier Dominic Perrottet ஆகியோர் வணிக உரிமையாளர்களுக்கு $50,000 மானியத்தை அறிவித்தனர்.

கடலோர நகரங்களுக்கு surf எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் Hunter Coast, Sydney Coast மற்றும் Illawarra Coastஇல் rock fishing, படகு சவாரி, நீச்சல் போன்ற நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

விக்டோரியாவில், Latrobe ஆற்றின் Yallourn முதல் Traralgon Creek வரை வசிப்பவர்கள் இப்போதே வெள்ளத்திற்கு தயாராக வேண்டும்.

விக்டோரியாவில் நிலவிய கடும் குளிர் காரணமாக Mount Buller, Mount Hotham, மற்றும் Falls Creek ஆகிய இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக 30 சென்டிமீட்டர் பனிப்பொழிவு ஏற்பட்டது.

கடந்த மூன்று நாட்களாக மெல்பனில் 14 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது கடைசியாக நவம்பர் 1965 இல் நிகழ்ந்தது.

Bureau of Meteorology,  NSW SES, VIC SES  ஆகிய இணையத்தளங்களைப் பார்ப்பதன் மூலம் சமீபத்திய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள் உயிருக்கு ஆபத்தான அவசர சூழ்நிலையில் இருந்தால் 000 ஐ அழைக்கவும். புயல், காற்று, hail அல்லது மரங்கள் வீழ்ந்ததால் சேதம் ஏற்பட்டால் மற்றும் மரக்கிளை உங்கள் வீடு அல்லது ஆட்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தால், NSW SES-ஐ 132 500 என்ற எண்ணிலும் Victoria Emergency Services-ஐ 1800 226 226 என்ற எண்ணிலும் அழைக்கவும்.

பிற மொழிகளில் இந்தத் தகவலைப்பெற மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவையை 131 450 என்ற எண்ணில் அழைத்து, VicEmergency Hotline ஐஅழைக்கச் சொல்லுங்கள்.

நீங்கள் காது கேளாதவராகவோ அல்லது பேச்சு/தொடர்புக் குறைபாடு உள்ளவராகவோ இருந்தால், 1800 555 677 என்ற எண்ணில் National Relay சேவையைத் தொடர்புகொண்டு, VicEmergency Hotline ஐ அழைக்கும்படி அவர்களிடம் கேளுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


3 min read

Published

Updated

By SBS

Source: SBS




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now