ஆஸ்திரேலியாவில் ஸ்ட்ரோபெர்ரி பழங்களுக்குள் ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுவரும் தொடர்ச்சியான சம்பவங்களின் புதிய செய்தியாக தற்போது சிட்னியில் ஆப்பிள் பழத்தினுள் ஊசி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சனல் 7 செய்தி வெளியிட்ள்ளது.
ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் ஆறு மாநிலங்களில் ஸ்ட்ரோபெர்ரியில் தையல் ஊசி கண்டுபிடிக்கப்பட்டதைத்தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்துகொள்ளும் வகையில் தீவிர விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன.
ஸ்ட்ரோபெர்ரி பழங்கள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது குயின்ஸ்லாந்தில் வாழைப்பழத்திற்குள் தகடொன்று கண்டுபிடிக்கப்பட்டதாக முறையிடப்பட்டதைத்தொடர்ந்து பழங்கள் தொடர்பான பரபரப்பு இன்னொரு பரிணாமத்தை எட்டியது.
இந்த பின்னணியில் சிட்னியின் வடக்கு பகுதியில் பெண் ஒருவர் வாங்கிய ஆப்பிளில் ஊசி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சனல் 7 செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
