SKIP TO MAIN CONTENT

Salmonella தொற்று:ஒருதொகுதி முட்டைகள் திரும்பப்பெறப்படுகின்றன!

An outbreak of salmonella infection has prompted the recall of eggs from Glendenning Farms.
(File) An outbreak of salmonella infection has prompted the recall of eggs from Glendenning Farms. Source: AAP

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் விற்கப்பட்ட முட்டைகள் ஊடாக salmonella பக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து ஒருதொகுதி முட்டைகள் திரும்பப்பெறப்படுகின்றன.

September 8, 10, 15, 17, 22, 24, 29, October 1 ஆகிய காலாவதி திகதிகளுடன் கூடிய Glendenning Farm முட்டைகளே இவ்வாறு மீளப்பெறப்படுவதாக முட்டை விற்பனை முகவர் நிறுவனமான Eggz தெரிவித்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 23 பேருக்கு salmonella தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிச்செய்யப்பட்டுள்ளதாக NSW Food Authority நேற்று தெரிவித்திருந்ததையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த முட்டைகளை வாங்கியவர்கள் அவற்றை குப்பையில் எறிந்துவிடுமாறோ அல்லது எங்கு வாங்கினார்களோ அங்கே கொண்டுசென்று கொடுத்து பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now