SKIP TO MAIN CONTENT

Samsung Galaxy Fold ஆஸ்திரேலியாவில்! முப்பதாம் திகதி முதல் மூவாயிரம் டொலர்களுக்கு!

Samsung Galaxy Fold
Samsung says the Galaxy Fold screen can withstand being opened 100 times a day for five years. (AAP) Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

Samsung அறிமுகம் செய்துள்ள மடிக்கும் கைத்தொலைபேசி - Samsung Galaxy Fold - எதிர்வரும் October 30 ஆம் திகதி மூவாயிரம் டொலர்களுக்கு ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் என்று Samsung நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் அதி உயர் விலையில் சந்தைக்கு வரவுள்ள கைத்தொலைபேசி என்ற பெருமையை மாத்திரமல்லாமல், ஆஸ்திரேலியாவின் முதலாவது மடிக்கும் கைத்தொலைபேசி என்ற வரலாறையும் Samsung Galaxy Fold எழுதவுள்ளது என்று Samsung நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வருட மத்தியில் இந்த மடிக்கும் கைத்தொலைபேசி சந்தைக்கு வரவிருந்தபோதும் Galaxy Fold தொலைபேசியை பயன்படுத்திய சில ஊடகவியலாளர்கள், பயன்படுத்தி இரண்டு நாட்களிலேயே Galaxy Fold திரை கறுப்பாகி உடையத்தொடங்கியதாக தெரிவித்ததையடுத்து இதன் வெளியீடு தாமதமானது.

இந்நிலையில் நாளொன்று 100 தடவைகள்படி ஐந்துவருட பாவனைக்காலத்தில் இரண்டு லட்சம் தடவைகளுக்கும் மேல் மடிக்கக்கூடியளவு தொழில்நுட்பத்தரத்தோடு தாங்கள் Galaxy Fold தொலைபேசியை உருவாக்கியுள்ளதாக Samsung நிறுவனம் கூறியுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now