இலங்கை முறையில் ஆட்டிறைச்சி வறுவல் கறி மற்றும் ரொட்டியை இரவு உணவாக சமைத்து உட்கொண்டதாக பிரதமர் ஸ்கொட் மொறிசன் வெளியிட்ட பேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
"முழுக்க முழுக்க இலங்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுதான் எமது சனிக்கிழமை இரவுணவு. மனைவி மற்றும் பிள்ளைகள் விரும்பி உண்டனர். இத்தருணத்தில் கொரோனா கட்டுப்பாடுகளால் முடங்கியிருக்கும் மெல்பேர்ன் மக்களை நினைவில் கொள்கிறேன்" என்பதாக தனது பேஸ்புக் பதிவில் ஸ்கொட் மொறிசன் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்டிறைச்சி வறுவல் கறி மற்றும் ரொட்டியை தயார் செய்யும்போது எடுத்த புகைப்படங்களையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
சமையலில் ஈடுபட்டதை வெளிப்படுத்தும் பிரதமரின் இப்பதிவு இலங்கையர்களால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இதேபோன்று அண்மையில் இந்திய முறையில் மாங்காய் சட்னியுடன் சமோசாவை தயாரித்திருந்த பிரதமர் ஸ்கொட் மொறிசன், அதனை இந்தியப் பிரதமர் மோடியுடன் பகிர்ந்துகொள்ள முடியாததையிட்டு கவலையடைவதாகத் தெரிவித்திருந்த பேஸ்புக் பதிவும் வைரலாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: Facebook

Source: Facebook
Share
