சவுதி அரேபியாவில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஒட்டகங்களுக்கான அழகிப் போட்டியில் பங்கேற்கவிருந்த சுமார் 40 ஒட்டகங்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டன.
குறித்த 40 ஒட்டகங்களினதும் அழகை மெருகூட்டுவதற்காக botox போன்ற செயற்கையான முறைகள் பயன்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதே இதற்கான காரணமாகும்.
மனிதர்கள் தமது அழகை மெருகூட்ட மேற்கொள்ளும் botox அழகு சிகிச்சை ஒட்டகங்களுக்கும் செய்யப்படுகிறதா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். இதற்கான பதில் ஆம் என்பதுதான்.
சவுதி அரேபியாவில் மன்னர் Abdulaziz பெயரில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஒட்டக திருவிழாவானது இந்த முறையும் மிக சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

A portrait of a camel in the UAE desert farm near Abu Dhabi Source: iStockphoto
சுமார் 90 மில்லியன் டொலர்கள் பரிசுத்தொகை கொண்ட இந்த திருவிழாவில், உலகின் பல பாகங்களிலிருந்து ஒட்டக உரிமையாளர்கள் தமது ஒட்டகங்களை அழைத்துக்கொண்டுவந்து பங்கேற்கின்றனர்.
ஒட்டகத்திருவிழாவின் ஒரு அம்சமாக ஒட்டக அழகிப் போட்டியும் நடத்தப்படுகிறது.
இம்முறையும் போட்டி கடுமையாக இருந்ததால் ஒவ்வொரு ஒட்டகமும் கடுமையாக சோதனை செய்யப்பட்டு, சுமார் 40 ஒட்டகங்களுக்கு plastic surgery, botox மற்றும் ஏனைய cosmetic touch-ups போன்ற செயற்கை அழகுபடுத்தல் நடந்திருப்பதைக் கண்டுபிடித்து அவை தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக, சவுதியின் அரச நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சில ஒட்டகங்களினது உதடு மற்றும் மூக்கு போன்றவை collagen lip fillers பயன்படுத்தப்பட்டு பெரிதாக்கப்பட்டிருந்ததாகவும், ஹோர்மோன்கள் பயன்படுத்தப்பட்டு தசை வளர்ச்சியடைய வைக்கப்பட்டிருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
பெரிய, கீழ்நோக்கியதாக அமைந்திருக்கும் மூக்கு, காது மடல்கள் பின்நோக்கி நேராக இருத்தல், கழுத்து மிகவும் நீளமாக இருப்பது, திமில் உயர்ந்து இருப்பதுடன் சிறிது பின்னால் இருப்பது, அழகான உதடுகள் போன்றவை ஒட்டகங்களின் சிறப்பம்சங்காக பார்க்கப்படுவதால் இவற்றை செயற்கை முறையில் அழகுபடுத்த பல உரிமையாளர்கள் முயற்சிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Camels braying at the Pushkar Camel Festiival, Rajasthan, India Source: Digital Vision
கடந்த 2018ம் ஆண்டு போட்டியிலும் இவ்வாறு விதிமீறலில் ஈடுபட்ட சுமார் 12 ஒட்டகங்கள் போட்டியில் பங்கேற்கமுடியாதவாறு தகுதிநீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சவுதியில் டிசம்பர் 1ம் திகதி ஆரம்பித்த ஒட்டகத் திருவிழா ஜனவரி 12ம் திகதி முடிவடைகிறது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.