SKIP TO MAIN CONTENT

சவுதியில் கடந்த வருடம் 184 பேருக்கு மரணதண்டனை! 90 பேர் வெளிநாட்டவர்கள்!!

AAP
AAP Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

சவுதியில் கடந்த வருடம் 184 பேருக்கு சிரச்சேதம் செய்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் இருவர் சிறுவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் ஆர்ப்பாட்டத்துக்கு வட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு மின்சாரம் செலுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரசாங்கம் கடந்த ஆறு வருடங்களில் நிறைவேற்றிய மரண தண்டனைகளில் கடந்த வருடம்தான் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னருக்கு எதிராக முறைகேடாக நடந்துகொண்டமை, அரசுக்கு எதிரான பாதாகைகளை தயாரித்தமை, சமூக வலைத்தளங்களின் ஊடாக அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட  குற்றச்சாட்டுக்களுக்காக இம்மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக  குறிப்பிடப்படுகிறது.

மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் 88 பேர் சவுதியை சேர்ந்தவர்கள் என்றும் 90 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now