SBS தேசிய மொழிப் போட்டி 2017

கடந்த 2016-இல் நடைபெற்ற SBS தேசிய மொழிப் போட்டியில், நாடு முழுவதிலிருந்தும் 20 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டிருந்த நிலையில், தேசிய மொழிப் போட்டி 2017 க்கான நேரம் வந்துவிட்டது.

SBS National Languages Competition

SBS National Languages Competition Source: SBS

உங்கள் பிள்ளையோ அல்லது உங்கள் பள்ளியில் கல்விகற்கும் மாணவர்களோ ஆங்கிலம் தவிர தமிழ் அல்லது வேறுமொழியொன்றைக் கற்கிறார்களா? அப்படியென்றால் தேசிய மொழிப் போட்டி என்ற பயனுள்ள பள்ளி விடுமுறைக்கால செயற்றிட்டமொன்று SBS வசமிருக்கிறது.

1. தேசிய மொழிப் போட்டி என்பது என்ன?

இது பல்கலாச்சாரப் பின்னணி கொண்ட ஆஸ்திரேலியாவில், ஆங்கிலம் தவிர மற்றுமொரு மொழியைக் கற்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் போட்டியாகும். நாடுதழுவிய ரீதியில் நடத்தப்படும் இப்போட்டியில் மாணவர்களைக் கலந்துகொள்ளச் செய்வதன் மூலம் ஆஸ்திரேலியாவின் பல்கலாச்சாரத்தன்மை மெருகூட்டப்படுகிறது.

இப்போட்டியில் ஆங்கிலம் தவிர மற்றுமொரு மொழியைக் கற்கும் 4 வயது முதல் 18 வயது வரையான மாணவர்கள் பங்கேற்க முடியும்.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் மற்றொரு மொழியைக் கற்பது அவர்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை, 30 செக்கன் காணொளியாக பதிவு செய்து அனுப்ப வேண்டும். அந்தக் காணொளி ஆங்கிலம் அல்லாத வேறு மொழியிலேயே அமைந்திருக்க வேண்டும்.

2. இப்போட்டி எப்போது தொடங்குகிறது?

போட்டிக்கான விண்ணப்பங்கள் திங்கட்கிழமை 24.07.2017 காலை 9 மணி முதல் வெள்ளிக்கிழமை 01.09.2017 நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும். இக்காலப்பகுதியில் பாடசாலை விடுமுறை முடிவடைந்துவிடுமென்பதால் இதில் பங்கேற்க விரும்பும் பிள்ளைகளை இப்போதே தயார்ப்படுத்துங்கள்.

3. இதில் யாரெல்லாம் பங்கேற்கலாம்?

ஆஸ்திரேலியா முழுவதுமுள்ள பாடசாலைகள் மற்றும் மொழிகளைக் கற்பிக்கும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கலந்துகொள்ளலாம். கீழ்க்காணும் நான்கு பிரிவுகளின்கீழ் போட்டி நடைபெறும்.

  • Category A: Junior Primary (Aged 4 – 7)
  • Category B: Primary (Aged 8 – 12)
  • Category C: Junior High School (Aged 13 – 15)
  • Category D: Senior High School (Aged 16 – 18)

4. வெற்றியாளர்களுக்கு என்ன பரிசு வழங்கப்படும்?

மேற்கூறப்பட்ட ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெறுபவர்களுக்கு iPad Pro 12.9 inch 256GB வழங்கப்படும் அதேநேரம், அவர் சார்ந்திருக்கும் பள்ளிக்கும் iPad ஒன்று வழங்கப்படும்.

அத்துடன் சிட்னி Luna Park-ற்கான இரு Full day நுழைவுச்சீட்டுக்களும் வழங்கப்படும்.

மேலும் அக்டோபர் மாதம் சிட்னியிலுள்ள SBS தலைமை அலுவலகத்தில் நடைபெறும் பரிசளிப்பு விழாவிற்கும் வெற்றியாளர்கள் அழைக்கப்படுவார்கள்.

வெற்றிபெற்றவர்கள் NSW அல்லாத வேற்று மாநிலத்தில் வசித்தால், பரிசளிப்பு விழாவில் பங்கேற்கும் வகையில் வெற்றியாளருக்கும் அவரது பெற்றார் ஒருவருக்கும், இருவழி விமானச் சீட்டும் ஓரிரவுக்கான தங்குமிட வசதியும் செய்துகொடுக்கப்படும்.

5. வெற்றியாளர்கள் எப்போது அறிவிக்கப்படுவர்?

தேசிய மொழிப் போட்டியின் 4 பிரிவுகளின் வெற்றியாளர்கள் யார் என்பது செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும். இதுகுறித்து வெற்றியாளர்களுக்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஊடாக அறியத்தரப்படும்.

6. பள்ளிகளுக்கான உதவிகள்

இப்போட்டியில் மாணவர்களைச் கலந்துகொள்ளச் செய்வதற்கு கீழ்க்காணும் உதவிகளை பள்ளிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

  • Poster – Print-friendly A3 version to be pinned on the school notice boards to
  • encourage participation
  • Flyer – This is a more detailed A4 version aimed at teachers, parents and guardians
  • FAQs – For teachers, parents and guardians
  • Terms and Conditions

தயவு செய்து முடியுமானவரை இச்செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

7.  மேலதிக தொடர்புகளுக்கு

For technical problems and general enquiries, please email us at queries.nlc@sbs.com.au

For media enquiries, contact Uma.Sandeep@sbs.com.au

மேலும் National Languages Competition Facebook group என்ற முகநூல் குழுவிலும் இணைந்து கொள்ளலாம்.

 

 


2 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: SBS Radio



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now