உங்கள் பிள்ளையோ அல்லது உங்கள் பள்ளியில் கல்விகற்கும் மாணவர்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களோ தமிழ் அல்லது வேறுமொழியொன்றைக் கற்கிறார்களா? அப்படியென்றால் தேசிய மொழிப் போட்டி என்ற பயனுள்ள செயற்றிட்டமொன்று SBS வசமிருக்கிறது.
1. தேசிய மொழிப்போட்டி என்பது என்ன?
இது பல்கலாச்சாரப் பின்னணி கொண்ட ஆஸ்திரேலியாவில், மற்றுமொரு மொழியைக் கற்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் போட்டியாகும். நாடுதழுவிய ரீதியில் நடத்தப்படும் இப்போட்டியில் மாணவர்களைக் கலந்துகொள்ளச் செய்வதன் மூலம் ஆஸ்திரேலியாவின் பல்கலாச்சாரத்தன்மை மெருகூட்டப்படுகிறது.
இப்போட்டியில் ஏதாவதொரு மொழியைக் கற்கும் அனைவரும் பங்கேற்க முடியும்.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் மற்றொரு மொழியைக் கற்பது அவர்களுக்கு எப்படியான வாய்ப்புக்களைத் திறக்கிறது என்பதை, ஒரு படமாகவோ அல்லது ஓவியமாகவோ அனுப்ப வேண்டும். அது குறித்த விளக்கம் ஒன்றை அவர்கள் கற்றுக்கொண்டிருக்கும் மொழியில் எழுதும் அதேநேரம் அதன் மொழிபெயர்ப்பை ஆங்கிலத்திலும் எழுதி அனுப்ப வேண்டும்.
2. இப்போட்டி எப்போது தொடங்குகிறது?
போட்டிக்கான விண்ணப்பங்கள் திங்கட்கிழமை 15.10.2018 காலை 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை 18.11.2018 நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
3. இதில் யாரெல்லாம் பங்கேற்கலாம்?
கீழ்க்காணும் நான்கு பிரிவுகளின்கீழ் போட்டி நடைபெறும்.
- Category A: Junior Primary (Aged 4 – 7)
- Category B: Primary (Aged 8 – 12)
- Category C: Junior High School (Aged 13 – 15)
- Category D: Senior High School (Aged 16 – 18)
- Category E: Open category (Aged 18+)
4. வெற்றியாளர்களுக்கு என்ன பரிசு வழங்கப்படும்?
மேற்கூறப்பட்ட ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெறுபவர்களுக்கு iPad Pro வழங்கப்படும் அதேநேரம், அவர் சார்ந்திருக்கும் பள்ளிக்கும் iPad ஒன்று வழங்கப்படும்.
மேலும் டிசம்பர் மாதம் சிட்னியிலுள்ள SBS தலைமை அலுவலகத்தில் நடைபெறும் பரிசளிப்பு விழாவிற்கும் வெற்றியாளர்கள் அழைக்கப்படுவார்கள்.
வெற்றிபெற்றவர்கள் NSW அல்லாத வேற்று மாநிலத்தில் வசித்தால், பரிசளிப்பு விழாவில் பங்கேற்கும் வகையில் வெற்றியாளருக்கும் அவரது பெற்றார் ஒருவருக்கும், இருவழி விமானச் சீட்டும் ஓரிரவுக்கான தங்குமிட வசதியும் செய்துகொடுக்கப்படும்.
5. வெற்றியாளர்கள் எப்போது அறிவிக்கப்படுவர்?
தேசிய மொழிப் போட்டியின் 4 பிரிவுகளின் வெற்றியாளர்கள் யார் என்பது நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும். இதுகுறித்து வெற்றியாளர்களுக்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஊடாக அறியத்தரப்படும்.
6. பள்ளிகளுக்கான உதவிகள்
இப்போட்டியில் மாணவர்களைச் கலந்துகொள்ளச் செய்வதற்கு www.sbs.com.au/nlc18 என்ற இணைப்பிற்குச் சென்று கீழ்க்காணும் அம்சங்களின் ஊடாக உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம் .
- Poster – Print-friendly A3 version to be pinned on the school notice boards to
- encourage participation
- Flyer – This is a more detailed A4 version aimed at teachers, parents and guardians
- FAQs – For teachers, parents and guardians
- Terms and Conditions
தயவு செய்து முடியுமானவரை இச்செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
7. மேலதிக தொடர்புகளுக்கு
For technical problems and general enquiries, please email us at queries.nlc@sbs.com.au
For media enquiries, contact Uma.Sandeep@sbs.com.au
