உலகின் மிகப் பெரிய பல்மொழி பொது ஊடகமான SBS நிறுவனம் ஆஸ்திரேலியாவின் பல்கலாச்சார சமூகங்களின் குரல்களை பிரதிபலிப்பதை தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பில் Casual நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்ற எதிர்பார்க்கப்படும் தகுதிகள்:
· ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்தின் பின்னணி, பண்பாடு, மற்றும் தேவைகள் குறித்த தெளிவான புரிதல்.
· வானொலி, ஆன்லைன், சமூக ஊடகங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் செய்தி, நாட்டு நடப்புகள், மற்றும் சமூக நிகழ்வுகளை ஆய்வு செய்து, மொழிபெயர்த்து எழுதித் தயாரித்து வழங்கும் திறமை.
· தமிழ் மற்றும் ஆங்கிலம் பேசுவதிலும், தட்டச்சு செய்வதிலும் தேர்ச்சி.
· நேர்முகத் தேர்வின் ஒரு பகுதியாக மொழித் திறன் மற்றும் இதழியல் தொடர்பான தேர்வுகளை எதிர்கொள்ளத் தயாராக இருத்தல்.
· தொழில்நுட்பம் குறித்த அறிவு, ஊடக அனுபவம், சமூக ஊடகப் பயன்பாடு (Facebook, Twitter, Instagram) கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.
இந்த Casual பணி SBS நிறுவனத்தின் Enterprise Agreement கீழ் Level 2 ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது; ஊதிய அளவு அனுபவத்திற்கேற்ப நிர்ணயம் செய்யப்படும்.
அதிக தகவலுக்கும், விண்ணப்பிக்கவும் பின்வரும் இணைப்பில் செல்லுங்கள்.
