SKIP TO MAIN CONTENT

SBS World Movies ஐ சேனல் 32 இல் காணத் தயாராகுங்கள்

18 ஜூன் 2019 முதல் SBS VICELAND ஐ எப்படி தொடர்ந்து பார்ப்பது ?

SBS Viceland HD logo
SBS VICELAND is available in HD on free-to-air channel 31. Source: SBS

3 min read

Published

Updated


Skip to article content

SBS VICELANDஐ தற்போது சேனல் 32 இல் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் 18 ஜூன் 2019 திங்கள்கிழமை முதல் சேனல் 31  இல் தான்  பார்க்க முடியும்.

 

 

1 ஜூலை 2019 முதல் SBS World Moviesஐ அனைத்து ஆஸ்திரேலியர்களும் HD திறனுடன் இலவசமாக கண்டு மகிழ வழி இந்த மாற்றம் கொண்டுவரப்படுகிறது. .  

 

 

SBS World Movies என்றால் என்ன? 

 

ஆஸ்திரேலிய பார்வையாளர்களுக்கு கடந்த 25 ஆண்டுகளாக மாறுபட்ட சர்வதேச திரைப்படங்களை வழங்கிவரும் சேவையின் தொடர்ச்சியாக, உலகின் தலை சிறந்த திரைப்படங்களை SBS World Movies உங்களுக்கு வழங்கவுள்ளது. SBS World Movies என்பது 1 ஜூலை 2019 முதல் சேனல் 32 இல் இயங்கும் ஒரு பிரத்யேக 24 மணிநேர சேனலாகும்.

 

ஐரோப்பிய கலையம்ச திரைப்படங்கள் முதல் பாலிவுட்டின் சிறந்த திரைப்படங்கள்,  அனிமேஷன், காதல், நகைச்சுவை, இன்னும் பல என்று இந்த சேனல் பலவற்றை ஒளிபரப்பவுள்ளது.  SBS World Movies  என்பது விருது பெற்ற திரைப்படங்கள்,  புகழ்பெற்ற புதிய வெளியீடுகளின் தளமாக இருக்கும். மட்டுமல்ல, எண்ணிக்கையில் பாதியளவு திரைப்படங்கள் ஆங்கிலம் இல்லாத பிற மொழிப் படங்களாக இருக்கும்.

 

சேனல் 32 இல் ஒளிபரப்பாகும் SBS VICELANDக்கு என்ன நடக்கிறது? 

 

SBS VICELANDசேனல் 32 இல் தரநிலை வரையறை Standard Definition (SD)மூலமும் சேனல் 31 இல் உயர் வரையறை High Definition (HD) மூலமும் ஒளிபரப்பாகி வந்தது.  இனி, 18 ஜூன் 2019 திங்கள்கிழமை முதல் SBS VICELAND சேனல் 32இல் ஒளிபரப்பாகாது; ஆனால் சேனல் 31 இல் தொடர்ந்து ஒளிபரப்பாகும். SBS VICELAND ஐ தற்போது சேனல் 32 இல் பார்த்துக்கொண்டிருப்பவர்கள்,  இனிமேல் சேனல் 31 இல் பார்க்கலாம் அல்லது SBS On Demandஇல் SBS VICELANDஐ தொடர்ந்து பார்க்கலாம்.  

 

சேனல் 32 (முன்புSBS VICELAND SD என்றிருந்தது) 1 ஜூலை 2019 முதல் SBS World Moviesஎன்று மாறுகிறது. 

 

SBS எந்த சேனல்களையோ அல்லது சேவைகளையோ நிறுத்துகிறதா?

 

SBS எந்த சேவைகளையோ அல்லது சேனல்களையோ நிறுத்தவில்லை. மாறாக, தற்போது வழங்கும் சேவைகளை நாம் தொடரும் அதே வேளையில், SBS World Movies எனும் இலவச சேனலை ஆரம்பிக்கிறோம்.

 

நான் எப்படி SBS VICELAND ஐ பார்க்க இயலும்?

 

SBS VICELANDசேனல் 31 இல் வழக்கம்போலவே ஒளிபரப்பாகும். அத்துடன், SBS On Demand லும் தொடர்ந்து இருக்கும்.

 

சேனல் 31என்பது HDசேனலாகும். எனவே நிகழ்சிகளை தொடர்ந்து பார்ப்பதற்கு சில பார்வையாளர்கள் தங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளில் அலைவரிசையை மாற்ற வேண்டும். (retune செய்ய வேண்டும்). உங்கள் தொலைக்காட்சிப்பெட்டி HD MPEG-4எனும் தொழில்நுட்பத்தோடு இணக்கமற்றதாக இருந்தால், SBS VICELANDநிகழ்ச்சிகளை நீங்கள் SBS On Demandவழியாக பார்க்கலாம்.

 

SBS World Movies ஐப் பார்க்க நான் அலைவரிசையை எப்படி மாற்றுவது? ( retune செய்வது?)

அலைவரிசையை மாற்ற வேண்டியவர்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்றலாம். இந்த வழிமுறைகள் தொலைக்காட்சிப் பெட்டியின்  எந்த மாடல் அல்லது பிராண்டுடன் தொடர்புடையவை அல்ல.  விளக்கங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளைப்பொறுத்து மாறுபடலாம்.

 

1. Control panelக்குச் செல்ல உங்கள் ரிமோட்டில்  “menu” அல்லது“home” என்றபொத்தானைஅழுத்துங்கள்.

 

2. “digital auto tuning” அல்லது“digital channel search”  என்பதை தெரிவு செய்யுங்கள்.

 

3.“start” அல்லது“search”என்பதை தெரிவு செய்யுங்கள். தொலைக்காட்சிப் பெட்டியின் அலைவரிசையை மாற்ற ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

 

அலைவரிசையை மாற்றுவது குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், உங்கள் தொலைக்காட்சிப் பெட்டி குறித்த பயனர் கையேட்டைப் பாருங்கள்.  அல்லது  தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்தை தொடர்புகொள்ளுங்கள்.

 

மேலும் உதவி தேவைப்பட்டால், நீங்கள் SBS ஐ வணிக நேரங்களில் 1800 500 727 எனும் இலக்கத்தில் அழையுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now