SKIP TO MAIN CONTENT

SBS World Movies: ஜூலை மாதம் முதல் இலவசம்!

SBS World Movies is coming to FTA TV.
SBS World Movies is coming to your television. Source: SBS Movies

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

SBS World Movies எனப்படுகின்ற அனைத்து மொழி திரைப்படங்களும் ஒளிபரப்பாகின்ற தொலைக்காட்சி சேவை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் அனைவருக்கும் இலசவசமான சேவையாக ஆஸ்திரேலிய அலைவரிசைகளில் ஒளிபரப்பாகவுள்ளது.

24 மணி நேரமும் ஒளிபரப்பாகவுள்ள SBS World Movies சேவையில் உலகெங்கிலுமிருந்து வெளிவருகின்ற தரமான - பல மொழி - திரைப்படங்களும் தெரிவுசெய்யப்பட்டு ஒளிபரப்பப்படவுள்ளதாக SBS நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 25 வருடங்களாக பணம் செலுத்தி பயன்படுத்தக்கூடிய தொலைக்காட்சி சேவையாக வழங்கப்பட்டுவந்த SBS World Movies-ஐ  ஜூலை மாதம் தொடக்கம் இலவசமாக தங்களது பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைவதாக கூறியுள்ள SBS நிர்வாகம், பல மொழிகளிலும் வெளிவரும் சுமார் 700 திரைப்படங்கள் வருடமொன்றுக்கு சராசரியாக ஒளிபரப்பாகவுள்ளன என்றும் கூறியுள்ளது.

Channel 32 அலைவரிசையில் ஒளிபரப்பாகும் SBS World Movies ஊடாக தீபாவளி, மகளிர்தினம், Mardi Gras, Lunar New Year போன்ற சிறப்பு தினங்களில் சிறப்பு திரைப்படங்களும் ஒளிபரப்பாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now