கோவிட் தொற்றுக்கான தடுப்பூசி வழங்கப்படுவதற்கான ஆயத்தங்கள் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில், இணையத் திருடர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடிய வாய்ப்புள்ளதால் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு ஆஸ்திரேலிய இணையப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் கவனம் முழுமையாகக் குவிகின்ற எந்த விடயங்களிலும் திருடர்கள் நுழைந்துகொள்வது அவர்களது பாரம்பரியமான அணுகுமுறையாகும். தற்போது கோவிட் தடுப்பூசி தொடர்பான மக்கள் கவனம் குவிந்திருக்கின்ற காலப்பகுதியை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி தனிப்பட்ட தகவல்களை நூதனமாக திருடுவதற்கு இணையத் திருடர்கள் முயற்சிசெய்யக்கூடும் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
லண்டனில் தடுப்பூசிக்காலப்பகுதியில் இவ்வாறான இணையத்திருடர்களின் கைவரிசை மலிந்திருந்ததாகவும் போலி இணையத்தளங்கள், சமூக வலைத்தளப்பக்கங்களை உருவாக்கி, அவற்றில் தனிப்பட்ட தகவல்களைக்கோரும் நூதனத்திருட்டுக்கள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் இதுவிடயத்தில் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
