SKIP TO MAIN CONTENT

விஞ்ஞானம், தொழில்நுட்பம் - 2020

Facial recognition technology
Source: Getty Images

5 min read

Published

By R.Sathiyanathan


Skip to article content

2019 இன் இறுதிப்பகுதியில் புதியவகை நிமோனியா ஒன்று சீனாவில், குறிப்பாக, Wuhan பகுதியில் பரவியதும் இதற்கு முன்னர் இனங்காணப்படாத புதிய microbial parasite என்று அது அப்போது அறியப்பட்டதும், அது 2020 இன் பெரும்பகுதியை corona virus என்ற பெயரில் ஆக்கிரமித்து, உலகையே தலைகீழாக மாற்றிப்போட்டதும், இந்த நூற்றாண்டின் மாபெரும் நிகழ்வாக வரலாற்றில் பதிவானது.

விஞ்ஞானம் தொழில்நுட்பம் என்று பார்க்கின்றபோதும் இவ்வருடம் முழுமையாக இந்த புதிய வைரஸின் தன்மையை அறிந்துகொள்வது; இது ஒருவரது உடலில் இருக்கிறதா என்பதை விரைவாக அறிந்துகொள்ளும் வழிகள் என்ன; அது யாருக்கு என்ன விதமான பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது; இந்த பாதிப்புக்களின் குறுகிய, கால நீண்டகால தாக்கங்கள் என்ன; இது எப்படி பரவுகிறது; இது பரவுவதை எப்படி கட்டுப்படுத்துவது; வைரஸால் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தும் வழிகள் என்ன; வைரஸ் பரவுவதை trace செய்யும்- நோய்த்தடம் அறியும் வழிகள் என்ன; இந்தவைரஸுக்கான தடுப்புமருந்தைக் கண்டுபிடித்து சோதனை செய்யும் முயற்சிகள் என்ற இன்னோரன்ன முனைப்புக்களிலேயே விஞ்ஞான- தொழில்நுட்ப உலகம் மூழ்கிப்போனது.

ویروس Novel Coronavirous SARA-CoV-2
ویروس Novel Coronavirous SARA-CoV-2 Source: AAP

Corona virus அல்லது Covid 19 என்ற கொள்ளைநோய் காரணமாக சர்வதேசரீதியாக இயங்கிவந்த விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆய்வுகூடங்களும், வானியல் மற்றும் விண்வெளி ஆய்வுகூடங்களும் ஏறக்குறைய முற்றாக முடங்கிப் போன அதேவேளையில் இதற்காக ஒதுக்கப்பட்டிருந்த resources - வளங்கள் அனைத்தும் covid 19 ஐ எதிர்கொள்ளும் முயற்சிகளுக்காக மடைமாற்றம் செய்யப்பட்டன. இந்த நிறுவனங்களிலும் ஆய்வு கூடங்களிலும் பணியாற்றியவர்கள் பணிக்கு வரமுடியாத நிலையிலும், பல நிறுவனங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதித்தாலும் ஆய்வுகூடங்களைப் பொறுத்த அளவில் அவை முழுமையாக மூடப்பட்டன.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளின் மூலமாக திரட்டப்படும் அறிவு, ஆற்றல் மற்றும் கண்டு பிடிக்கப்படும் தீர்வு என்பன மனிதகுல மேம்பாட்டிற்கும் அவர்களது இடர்களைக் களைவதற்கும் பயன்படவேண்டும் என்ற கண்ணோட்டத்தில், சர்வதேச நாடுகள் தமது strategies - வியூகங்களை மாற்றிக்கொண்டன.

Covid 19 ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் தீவிரம் காரணமாக, அதைக் களைவது தொடர்பான ஆராய்ச்சிகள், வளங்களை ஒருமுகப்படுத்தும் முயற்சிகள், ஏனைய நாடுகளுடன் தகவல்களை மற்றும் தரவுகளை பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கைகள் என்பவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. CSTD என்ற இதையே இவ்வருடத்திற்கான பிரதான இலக்காக அறிவித்தது.

UNCTAD
Source: unctad.org

இதன் காரணமாக OECD என்ற அமைப்பில் உள்ள நாடுகள் Science , Technology and Innovation என்ற விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்புக்கள் தொடர்பாக புதிய கொள்கைகளை அறிவித்தன. Fight against covid 19 - covid 19 இற்கு எதிரான நடவடிக்கைகள் முன்னிலைப் படுத்தப்பட்டன. உறுப்புநாடுகள் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பிலிருந்து covid 19 இற்கு எதிரான நடவடிக்கைகள் ஒருமுகப்படுத்துவதன் மூலமாக, வீண் விரயங்களைத்தவிர்க்க முடியும்; இனங்காணப்படும் தீர்வுகளை பரந்துபட்ட சமூகங்களுக்கு இடையே சோதனை செய்யமுடியும்; வளங்களைத்திரட்டவும் அவற்றை வேறுபட்ட அணுகுமுறைகளுக்கு பயன்படுத்தவும் முடியும்; covid 19 ஏற்படுத்தியுள்ள பொருளாதார பின்னடைவுகளுக்கு தீர்வு காண முடியும் என்பன போன்ற விடயங்களும் சுட்டிக்காட்டப்பட்டன.

இது ஒருபுறமிருக்க, ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு சொற்ப அளவிலேயே பயன்பாட்டிலிருந்த பல தொழில்நுட்பங்கள் இந்த ஆண்டு covid 19 ஏற்படுத்திய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக தூசுதட்டி புதுப்பிக்கப்பட்டு, மெருகேற்றப்பட்டு பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டன.

Covid 19 காரணமாக பெருமளவில் கல்விக்கூடங்கள் மற்றும் பாடசாலைகள் என்பன பாதிக்கப்பட்டன. இதன்காரணமாக தொலைதூரக்கல்வி distance education, video conferencing என்பன நேருக்கு நேரான கற்பித்தலுக்கு மாற்றுவழியாக நிரந்தர இடத்தைப்பிடித்துக்கொண்டன. We conferencing, Go to meeting, Google meet, Skype, Zoom போன்ற தளங்கள் two way communications என்ற இருவழி தொடர்புகளுக்கு பெருமளவில் பயன்படுத்தப்பட்டதோடு அவற்றில் உள்புகுத்தப்பட்ட Artificial Intelligence led transcription - செயற்கை நுண்ணறிவோடு கூடிய பிரதியாக்கம், ஒலிப்பதிவு, மற்றும் access codes, security PIN, meeting lock, end to end encryption போன்ற புதிய ஆற்றல்கள் காரணமாக security and privacy- பாதுகாப்பு, அந்தரங்கம் பேணும் மேலதிக சௌகர்யங்கள் ஏற்பட்டன.

Celebrating online
Celebrating online Source: Getty Images/izusek

இவற்றைத்தவிர, தொலை தூரக்கல்விக்கென மேலும் பல apps -செயலிகள் சந்தைக்கு வந்தன. Flipgrid, We video, Google forms, Google classroom, என்பவற்றை இங்கே குறிப்பிடலாம்.

இதே செயலிகள் அல்லது இது போன்ற செயலிகள், நலத்துறை, corporate sector என்ற வணிகத்துறை, அரச நிர்வாகம், ஆன்மீக மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள், போன்றவற்றிலும் பெருமளவில் பயன்பாட்டுக்கு வந்ததால் face to face - என்ற நேருக்கு நேர் சந்திக்கமுடியாத நிலைமைக்கு மாற்றாக அமைந்தன.

புதிதாக Google அறிமுகப்படுத்தியுள்ள Hangouts Meet என்ற செயலி மூலமாக 250 பேர்வரை ஒரு குழுவாக இணைத்துக்கொண்டு இலவசமாக இருவழி உரையாட முடியும் என்பதுமட்டுமல்ல, 1லட்சம் பேருக்கு live streaming செய்யமுடியும். Virtual school assembly என்ற முறையில் விரிவுரைகளை நடத்தவும், அத்தோடு இந்த விரிவுரைகள ஒலிப்பதிவு செய்து google drive இல் save- சேமித்துக்கொள்ளவும் முடியும்.

இதில் இன்னொரு விசேட அம்சம் என்னவென்றால், இயல்பு நிலைக்குத்திரும்பும் வரை பயன்படுத்தலாம் என அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொலத்தொடர்பு தொழில்நுட்பங்களின் ஆற்றல், எளிமை மற்றும் பொருளாதாரச் சிக்கனம் என்பன காரணமாக நிலைமை சீரடைந்தபின்னரும் இவை பெருமளவில் பயன்பாட்டில் நிச்சயம் இருக்கப்போகின்றன என்பதுதான்.

இவையெல்லாம் இருந்தபோதும் technology industry என்ற தொழில்நுட்ப தொழில்துறை பெருமளவில் ஸ்தம்பித நிலையில் இருக்கிறது. இயல்பு நிலை வெகுவாக மாறிப்போன covid 19 யின் பின்னணியில், அடுத்த மாதம் அல்லது அடுத்த ஆறுமாதத்தில் அல்லது அடுத்த ஒருவருடத்தில் சர்வதேச நிலைமை எப்படி இருக்கப்போகின்றது என்பது யாருக்கும் தெரியாது என்பதால், எந்தவிதமான எதிர்காலத் திட்டமிடல்களையும் செய்யமுடியாத நிலை நிலவுகின்றது. தொழில்நுட்ப அபிவிருத்தி தொடர்பான பல நிகழ்வுகள் பின்போடப்பட்டும் ரத்துச்செய்யப்பட்டும் வரும் நிலையில் வாய்ப்புகள் வெகுவாக குறைந்துவிட்டன. தொழில் துறை ரீதியான பயணங்கள் முற்றாக இல்லையென்ற நிலையில் புதிதான முனைப்புகள் இல்லையென்றாகிவிட்டது.

Screens were filled with red on the floor of the New York Stock Exchange as growing fears of a Coronavirus pandemic cast a shadow over the global economy.
Source: Getty Images North America

Global supply chain என்ற உலக விநியோக சங்கிலி பாதிப்புக்குள்ளாகியிருப்பதால் உற்பத்தி ஸ்தம்பித்திருக்கிறது. இதனால் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பங்களில் வளர்ச்சியில்லை. ஏற்றுமதியை நம்பியே பல தொழில்நுட்ப நிறுவனங்கள் நுகர்வோருக்கான மற்றும் தொழில்துறைக்குத்தேவையான கருவிகளை மற்றும் உபகரணங்களை வடிவமைக்கின்றன-உற்பத்திசெய்கின்றன.

2020 நிச்சயமற்ற மற்றும் தெளிவற்ற நிலைமைகளை தோற்றுவித்திருந்தாலும் விஞ்ஞான தொழில்நுட்ப உலகில் இவ்வருடம் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சிலவற்றை பார்க்கின்றபோது உலகின் எல்லாமூலை முடுக்குக்கும் high speed internet என்ற ‘அதிவிரைவு இணைய தொடர்பை’ ஏற்படுத்த எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் பற்றி பிரதானமாக க் குறிப்பிடலாம். Orbit என்ற விண்வெளி சுற்றுப்பாதையில் பலநூறு செய்மதிகளை நிறுவி அவற்றின் மூலமாக அதிவேக இணைய இணைப்பை பரவலாக வழங்கும் நோக்கத்தில் SpaceX, Oneweb, Amazon, Telecast Operate போன்ற நிறுவனங்கள் முனைந்திருக்கின்றன.

அடுத்து AI - artificial intelligence என்ற செயற்கை நுண்ணறிவை mobilephone போன்ற சிறு உபகரணங்களுக்குள் நேரடியாக நுழைக்கும் தொழில்நுட்பம் . இந்த முயற்சியில் Google, IBM, Apple, Amazon போன்ற பெருநிறுவனங்கள் இறங்கியிருக்கின்றன.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நோயைக்குணப்படுத்தும் மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் இவ்வருடம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இதன் மூலமாக மிக சக்திவாய்ந்த antibiotic ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மூலக்கூறுகளை நொடியில் பகுத்தாயும் ஆற்றல் AI என்ற செயற்கை நுண்ணறிவுக்கு உண்டு.

Dementia
Elderly woman being fed. Source: Getty Images/Jasmin Merdan

மூப்பைத் தாமதப்படுத்தும் anti aging drugs என்ற மருந்துகள் தொடர்பாகப் பெறப்பட்டுள்ள பரிசோதனை முடிவுகள் இவ்வருடம் விஞ்ஞானத்துறையில் அடையப்பெற்றுள்ள சாதனையாகும். மூப்பைத் தாமதப்படுத்துவதன் மூலமாக புற்றுநோய், dementia என்ற மறதி நோய், இருதய நோய்கள் என்பவற்றைத் தடுக்கமுடியும் என்று நம்பப்படுகிறது. மனிதர்மீது செய்யப்பட்ட சோதனைகள் ஓரளவு வெற்றியைத்தந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

Quantum computing என்பது சாதாரண கணணிகளால் பல மணித்தியாலங்களில் பகுத்தாய்வு செய்யக்கூடிய தரவுகளை சில நொடிகளில் பகுத்தாயும் super கணணிகளாகும். Quantum computerகளில் உள்ள Sycamore quantum processor கள் பல்லாயிரம் மடங்கு வேகமும் ஆற்றலும் கொண்டவை. இது முழு அளவில் செயல்பட பலவருடங்கள் எடுக்கும் என்றபோதும் இவ்வருடம் இத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறிப்பிடத்தகுந்தவையாகும்.

Quantum computing
Quantum computing Source: GettyImages/ ALFRED PASIEKA/SCIENCE PHOTO LIBRARY

குவாண்டம் கணணி போலவே குவாண்டம் இணையம் என்பது பற்றி ஆய்வுகள் நடந்துவருகின்றன. இந்தத் துறையிலும் இவ்வருடம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. Hackers என்று அழைக்கப்படும் இணைய ஊடுருவல் செய்பவர்களால் ஊடுருவி, தகவல்களைத் திருட முடியாதபடி வடிவமைக்கப்படும் இந்த Quantum இணைய வேலைகள் இவ்வருட இறுதியில் பூர்த்தியாகும் என்று சொல்லப்படுகிறது.

நாம் வழமையாகப் பயன்படுத்தும் கரன்சி நோட்டுக்களின் பயன்பாடு படிப்படியாக க் குறைந்து வருகிறது. இதன் இடத்தைப்பிடித்துவருவது digital money என்ற எண்ம நோட்டுக்களாகும். இதன் பயன்பாடு இவ்வருடம் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்திருக்கிறது. இடைத்தரகரோ, வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் தலையீடு இன்றி பாதுகாப்பாகப் பரிவர்த்தனை செய்ய இப்போது பலரும் cryptocurrency என்ற எண்ம கரன்ஸிகளையே பயன்படுத்த தொடங்கியிருக்கிறர்கள். Block chain technology என்ற தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த வகை கரன்ஸியை நோக்கியே எதிர்கால நிதிப்பரிவர்த்தனைகள் திசை திருப்பப்பட்டிருப்பதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.

Hyper personalised medicine என்பது மிக அரிய வகை நோய்களுக்கு ஒருவரது தேவைக்கும் அவரது மரபணு அமைப்புக்கும, ஏற்றவிதமாக தனிப்பட்ட மருந்தை வடிவ்வமைப்பதாகும். குணமாக்கமுடியாத பல நோய்களுக்கு இவ்வகையில் பரிகாரம் காணுவது தொடர்பாக இவ் வருடம் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறிப்பிடத்தகுந்தவை.

Covid 19 தொடர்பன அச்சங்களுடனும் தடுப்பு மருந்துகள் இந்த கொள்ளை நோயை அழிக்க உதவுமா என்ற எதிர்பார்ப்புகளுடனும் நாம் புதிய ஆண்டு ஒன்றில் காலடி எடுத்து வைக்கவிருக்கிறோம்.

நம்பிக்கைதானே வாழ்க்கை!

நம்பிக்கையோடு அந்த பயணத்தை மேற்கொள்ளுவோம்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now