SKIP TO MAIN CONTENT

குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து பயணிகளை அனுமதிக்க ஆஸ்திரேலியா ஆலோசனை?

Australian airport
Source: Flickr

2 min read

Published


Skip to article content

கொரோனா தொற்றில்லாத சில குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகளை ஆஸ்திரேலியா வருவதற்கு அனுமதிப்பது தொடர்பாக பரிசீலித்துவருவதாக பிரதமர் ஸ்கொட் மொறிஸன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாட்டுக்குள் வரவுள்ளவர்களை ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல், அவர்களது வீட்டில் இருவார தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் ஏற்பாடு குறித்து ஆலோசித்துவருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பிரதமரின் இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து கூறியுள்ள ஆஸ்திரேலிய சுகாதார தரப்பினர்(Australian Health Protection Principal Committee) கொரோனா பரவல் ஆபத்து நீக்கப்பட்ட நாடுகளாக கருதப்படும் ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்களை நாட்டுக்குள் அனுமதிப்பது குறித்து பிரதமர் தயாராக உள்ளார் என்றும் இவ்வாறு வருபவர்களுக்கான தனிமைப்படுத்தல்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் சுகாதார தரப்பினருடன் தொடர்ந்து ஆலோசித்துவருவதாகவும் கூறியுள்ளனர்.

டென்மார்க் தனது நாட்டுக்குள் வெளிநாட்டு பயணிகளை அனுமதிப்பதற்கு கடைப்பிடித்துவரும் அணுகுமுறையை பின்பற்றுவது குறித்து பிரதமர் மொறிஸன் ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வெளிநாட்டு பயணிகளை மீண்டும் நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பில் முன்னெடுக்கவுள்ள ஒவ்வொரு அடியிலும் ஆஸ்திரேலியா மிகக்கவனமாக இருக்கவேண்டும். குழந்தை நடைபோடுவதுபோல மெதுவானதாக அமையவேண்டும். கொஞ்சம் தவறினாலும் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று மறுபுறத்தில் ஆஸ்திரேலிய சுகாதார தரப்பினர் எச்சிரிக்கையும் விடுத்துள்ளனர்.  

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now