SKIP TO MAIN CONTENT

கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றியளித்தால் அனைவருக்கும் இலவசம்- பிரதமர்

Prime Minister Scott Morrison tours the Astra Zeneca laboratories in Macquarie Park, Sydney, Wednesday, 19 August, 2020.
Prime Minister Scott Morrison tours the Astra Zeneca laboratories in Macquarie Park, Sydney, Wednesday, 19 August, 2020. Source: AAP

2 min read

Published

Updated


Skip to article content

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பளிக்கும் தடுப்புமருந்து சோதனை வெற்றியளித்தால் முழு ஆஸ்திரேலியர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தடுப்புமருந்தைத் தயாரிக்கும் பணியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள பின்னணியில் Oxford பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ள தடுப்புமருந்து வெற்றியளிக்கும் வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.

அவ்வாறு இந்த தடுப்புமருந்து வெற்றியளித்தால் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டனின் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான AstraZeneca-உடன் இணைந்து Oxford பல்கலைக்கழகம் இத்தடுப்பு மருந்தினைத் தயாரித்துவருகிறது.

இந்நிலையில் குறித்த தடுப்புமருந்தை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தமொன்று  AstraZeneca  நிறுவனத்திற்கும்  ஆஸ்திரேலிய அரசுக்குமிடையில் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி தடுப்புமருந்து பரிசோதனை வெற்றியளிக்கும்பட்சத்தில் அனைத்து ஆஸ்திரேலியர்களுக்கும் அதை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அதேநேரம் தடுப்பூசி வடிவத்திலுள்ள இம்மருந்தினை அனைவரும் போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள 95 வீதமான மக்களுக்கு(மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாதநிலையிலுள்ளவர்கள் 5 வீதமானோர் என கணிப்பிடப்படுகிறது) கொரோனா தடுப்புமருந்து கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என  பிரதமர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்தார்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now