விக்டோரியாவுக்கான தரைவழிப்பாதைகள் மிக விரைவில் திறக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக பிரதமர் ஸ்கொட் மொறிஸன் தெரிவித்துள்ளார்.
விக்டோரியாவின் regional பிராந்தியங்களுக்கான கட்டுப்பாடுகள் பெருமளவில் நீக்கப்பட்டிருப்பது நல்ல செய்தி என்றும் அதன் தொடர்ச்சியாக மாநிலத்துக்கான முழுமையான கட்டுப்பாடுகள் மிகவிரைவில் நீக்கப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் விக்டோரியாவுக்கான தரைவழிப்பாதையை திறப்பதற்கு நியூ சவுத்வேல்ஸ் மற்றும் தெற்கு ஆஸ்திரேலிய முதல்வர்கள் ஆர்வத்தோடு காத்திருப்பதாக தான் அறிவதாகவும் மொறிஸன் கூறியுள்ளார்.
இதேவேளை, கொரோனா கட்டுப்பாடுகளினால் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பமுடியாமலுள்ள ஆஸ்திரேலியர்களை அழைத்துவருவது தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு கடைப்பிடித்துவரும் எண்ணிக்கை வரம்பை அடுத்த வெள்ளிக்கிழமை முதல் வாரத்துக்கு நாலாயிரத்திலிருந்து ஆறாயிரமாக அதிகரிப்பதாகவும் கூறியுள்ளார்.
கொரோனா பரவலினால் ஒவ்வொரு நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படும் கட்டுப்பாடுகளினால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்கள் பகுதி பகுதியாக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்படுகிறார்கள்.
இப்போதைக்கு, சுமார் 27 ஆயிரம் பேர் இவ்வாறு ஆஸ்திரேலியா திரும்புவதற்கு காத்திருக்கிறார்கள்.
கிறிஸ்மஸிற்கு முன்னர் அவர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share
