தமிழ் மற்றும் சிங்கள சித்திரைப் புதுவருடத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக பிரதமர் Scott Morrison கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு சித்திரைப் புதுவருட கொண்டாட்டம் கொரோனா கட்டுப்பாடுகளால் சோபை இழந்துவிட்ட நிலையில், இந்தவருட கொண்டாட்டமும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே நடத்தப்பட வேண்டும் என்பதை தான் அறிந்திருப்பதாகவும், நிலைமையைப் புரிந்துகொண்டு அனைவரும் வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகள் கையில் இருப்பதால், அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா பரவலை முறியடித்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பமுடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், இந்த நம்பிக்கை சித்திரைப் புதுவருடத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கட்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.