SKIP TO MAIN CONTENT

வாகனம் ஓட்டும்போது குழந்தைகளை அதட்டினால் உங்களுக்கு அபராதம்!

தொட்டாலே போதும்... நீங்கள் குற்றம் இழைத்தவர் என்று தண்டிக்கப்படுவீர்கள். இது உங்களுக்குத் தெரிந்த ஒரு சட்டம் தான். ஆஸ்திரேலியாவில் வாகனம் ஓட்டும் போது, மொபைல் தொலைபேசியைத் தொட்டால் குற்றம் என்பது உங்களுக்குத் தெரியும். வாகனம் ஓட்டுபவர் கவனத்தை மொபைல் தொலைபேசிகள் திசை திருப்புகின்றன என்பதற்காகவே அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இப்பொழுது, வாகனம் ஓட்டுபவர் கவனத்தைத் திசை திருப்பும் இன்னொரு விடயத்திற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.

Children with parents waving from car window
Source: Getty Images/India Picture

1 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan



Skip to article content

அது வாகனத்திலிருக்கும் குழந்தைகள் குறித்தது.

முன்மொழியப்பட்ட சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், வாகனம் ஓட்டும்போது குழந்தைகளைக் கண்டிக்கும் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படலாம்.

தொழில்நுட்பம், மற்றும் குழந்தைகளால் ஓட்டுநர்களின் கவனம் திசை திருப்பப்பட்டால் அபராதம் கட்ட நேரிடும்.

இரண்டு வினாடிகளுக்கு மேல், வாகனம் ஓட்டுவதிலிருந்து கவனம் திசை திரும்பியது என்றால் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.

அதிகரித்துவரும் ஓட்டுநர் கவனச்சிதறல்களை தடுப்பதற்கென இந்த சட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன.

தொழில்நுட்பம், குழந்தைகள் மற்றும் விலங்குகளால் ஓட்டுநர்கள் திசை திருப்பப்படுவதைத் தடுக்க தேசிய போக்குவரத்து ஆணையம் (National Transport Commission) புதிய சட்டங்களை உருவாக்கி வருகிறது.

தற்போதைய ஓட்டுநர் விதிகள் 1999 ஆம் ஆண்டிற்கு முந்தையது.  ஆனால் வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் மாறிவிட்டன.  அதிகரித்து வரும் தொழில்நுட்ப பயன்பாட்டிற்குத் தீர்வு காணும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

வாகனம் ஓட்டுவதற்குத் தேவையான வழிகாட்டி (navigation) போன்ற செயலிகளை ஓட்டுநர்கள் பயன்படுத்த அனுமதிக்கும் அதேவேளை, வாகனம் ஓட்டுவதிலிருந்து ஓட்டுநர்களின் கவனத்தைத் திசை திருப்பும் நடவடிக்கைகளுக்கு எதிராகவே சட்டங்கள் இயற்றப்படுகின்றன என்று தேசிய போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை சொல்கிறது.

மொபைல் தொலைபேசி மட்டுமல்ல, ஓட்டுநர்களின் கவனத்தைத் திசை திருப்பும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த வருடம் பெப்ரவரி மாதம் வெளியான “Driver Distraction: A Review of Scientific Literature” என்ற தலைப்பிலான அறிக்கையைப் பார்த்தால், இந்தப் பட்டியல் குழந்தைகளைக் கட்டுப்படுத்துவதோடு நின்று விடாது போல் தோன்றுகிறது.

Driver Interaction and Crash risk
Driver Interaction and Crash risk Source: NTC


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now