SKIP TO MAIN CONTENT

விசா சிக்கலில் இன்னொரு டென்னிஸ் நட்சத்திரம்! மெல்பன் ஹோட்டலில் தடுத்துவைப்பு!!

The Park Hotel on Friday in Melbourne where Novak Djokovic is being detained at the state-run quarantine facility as he awaits the outcome of an appeal against the decision by the Australian Border Force (ABF)
The Park Hotel on Friday in Melbourne where Novak Djokovic is being detained at the state-run quarantine facility as he awaits the outcome of an appeal. Source: Meg Hill/PA Wire

2 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் ஆட்டங்களில் கலந்துகொள்ள வந்திருந்த இன்னொரு வெளிநாட்டு நட்சத்திரத்தின் விசாவையும் ரத்துச் செய்த குடிவரவு அமைச்சு, அவரை ஹோட்டலில் தடுத்துவைத்துள்ளது. செக் குடியரசு வீராங்கனையான Renata Voráčová -இன் விசாவே இவ்வாறு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த ஆறு மாதங்களுக்குள் கோவிட் தொற்று ஏற்பட்டவர் என்ற அடிப்படையில், Renata Voráčová ஆஸ்திரேலியா விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, டென்னிஸ் ஆஸ்திரேலியா இவருக்கு கோவிட் தடுப்பூசி விலக்கு அளித்துள்ளது.

அதன் அடிப்படையில், விசா வழங்கப்பட்டு, ஆஸ்திரேலியா வந்து, மெல்பன் நகரில் ஒரு போட்டியில் கலந்துகொண்ட பின்னர், Novak Djokovic விவகாரம் சர்ச்சையான பிறகு மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில், Renata Voráčová -இன் விசாவும் தகுதியற்றது என கண்டறிந்து,  குடிவரவு அமைச்சு அதனை ரத்துச் செய்துள்ளது.

ஆஸ்திரேலிய விசா ரத்துச் செய்யப்பட்ட நிலையில், உலகின் முதல்தர டென்னிஸ் வீரர் Novak Djokovic  தடுத்துவைக்கப்பட்டுள்ள ஹோட்டலிலேயே Renata Voráčová-வும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

தனது விசா ரத்துச் செய்யப்பட்டதற்கு எதிராக சட்டப்போராட்டங்கள் எதுவும் மேற்கொள்ளாமல் நாடு திரும்பப்போவதாக  Renata Voráčová அறிவித்துள்ளார்.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். 

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now