SKIP TO MAIN CONTENT

Black Lives Matter: மெல்பேர்ன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இரண்டாவது நபருக்கு கொரோனா!

Protesters are seen during a Black Lives Matter rally in Melbourne on 6 June.
Protesters are seen during a Black Lives Matter rally in Melbourne on 6 June. Source: AAP

1 min read

Published


Skip to article content

மெல்பேர்னில் நடைபெற்ற Black Lives Matter ஆர்ப்பாட்டத்துக்கு சென்ற இன்னொருவருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் ஆறாம் திகதி மெல்பேர்னில் இடம்பெற்ற Black Lives Matter ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட யுவதி  ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக விக்டோரிய சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட Black Lives Matter ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய இரண்டாவது நபருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, மேலும் பலருக்கு இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் பல்வேறு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள யுவதிக்கு ஆர்ப்பாட்டத்தில் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்க சாத்தியம் இல்லை என்று மருத்துவத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now