SKIP TO MAIN CONTENT

"Selective School" முறை தடாலடியாக மாறுகிறது!

Aurora College, a state-run selective high school, caters for children from rural and remote regions of NSW.
Aurora College, a state-run selective high school, caters for children from rural and remote regions of NSW. Source: Getty Images

1 min read

Published

Presented by Renuka.T


Skip to article content

நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் selective schools எனப்படும் குறிப்பிட்ட சில பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு நடத்தப்படும் selective entry test- பரீட்சை முறையை மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வசதி படைத்த பெற்றோர் பெருந்தொகைப் பணத்தைச் செலவிட்டு தனியார் வகுப்புகள் பலவற்றை ஒழுங்கு செய்து, தற்போது selective schools-க்காக நடத்தப்படுகின்ற பரீட்சையில் தமது பிள்ளையை சித்தியடையச் செய்யவைப்பதாகவும், இதனால் வசதி குறைவான மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து இம்முடிவு எடுக்கப்படவுள்ளது.

selective schools-இல் இடம் கிடைக்க வேண்டுமென்றால் பெருந்தொகைப் பணத்தைச் செலவழித்து தனியார் வகுப்புகளுக்கெல்லாம் தமது பிள்ளையை அனுப்ப வேண்டுமென்ற மனப்பான்மை சமூகத்தில் பரவிவிட்டதாகவும், இந்நிலை மாற்றப்பட வேண்டுமெனவும் தெரிவித்த NSW கல்வித் திணைக்களத்தின் செயலாளர் Mark Scott, selective schools-இல் சகல பின்னணி கொண்ட மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக computer adap­tive IQ tests, student work portfolios, problem-solving tasks போன்ற அம்சங்களை அடிப்படையாக வைத்து selective schools-க்கான மாணவர் தெரிவு நடைபெறுமென தெரிவிக்கப்படுகிறது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now