உலகில் பரவிவரும் COVID-19 என்ற CORONA VIRUS-ஐ தடுப்பதற்காக பல முறைகள் கையாளப்படுகிறது. அவற்றில் ஒன்று SELF ISOLATION. அது என்ன என்று பார்க்கலாம்.
உலகில் அநேகமாக எல்லா நாடுகளிலும் இந்த CORONA VIRUS-ன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில நாடுகளில் மிக அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல நாடுகளில் இந்த பாதிப்பு ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.
அந்த வகையில், AUSTRALIA-விலும் இந்த CORONA VIRUS-ன் பாதிப்பை குறைக்கவும், அந்த நோய் பரவுவதை தடுக்கவும், பல கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதில் ஒன்றுதான் இந்த SELF-ISOLATION – தனிமைப்படுத்தலாகும்.
யார் யார் இந்த SELF ISOLATION நிலைமைக்கு தங்களை கட்டுப்படுத்த வேண்டும்?இந்த நாட்டுக்குள் இந்த நோய் இரண்டு வழிகளில் பரவி உள்ளது.
ஒன்று, வெளிநாட்டில் இருந்து வருபவர்களில் ஏற்கனவே இந்த நோயால் பாதிக்கப் பட்டவரிடம் இருந்து பரவலாம்.
இரண்டாவதாக, உள்நாட்டில் இருப்பவர்களில் ஏற்கனவே இந்த நோயால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பரவலாம்.
இதில் முக்கிய விடயம் என்னவென்றால் இந்த நோய்க்கிருமி ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவினால் அதனுடைய தாக்கம் 2 வாரங்கள் வரை தெரியாமலேயே இருக்கலாம்.
அதனால்தான் வேறு ஒருவரிடம் இருந்து தனக்கு நோய்க்கிருமி பரவி இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தாலும் அவர் SELF ISOLATION-ல் இருக்க வேண்டும்.
வெளிநாட்டில் இருந்து வருபவர்களின் ஆரோக்கிய நிலை நமக்கு தெரியாது. அதனால் தான் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் எல்லோருமே இந்த SELF ISOLATION-ல் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவு போட்டுள்ளது

இந்த நோய் பரவுவதை கட்டுப்படுத்த SOCIAL DISTANCE- ஐ கடை பிடிக்கவேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. SOCIAL DISTANCE-என்றால் என்ன? அதற்கும் SELF ISOLATION-க்கும் என்ன வித்தியாசம்?SOCIAL DISTANCE-என்பது ஒருவருக்கும் இன்னொருவருக்கும் இடையேயான தூரத்தை PHYSICAL DISTANCE-ஐ, அந்த இடைவெளியை அதிகரிப்பதை குறிக்கிறது. இந்த நிலையில் ஒருவர் அலுவலகத்துக்கு போகலாம், பள்ளிக்கு போகலாம், கூட்டம் இல்லாத பல இடங்களுக்கு போகலாம். ஆனால் ஒருவருக்கு ஒருவர் நெருங்கி இருக்காமல் முடிந்த வரை சுமார் ஒன்றரை மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும் என்பதை குறிப்பதாகும்.
SELF ISOLATION என்பது ஒருவர் ஒரு இடத்தில் அவரின் வீட்டிலோ, ஹோட்டலிலோ தனியாக இருக்க வேண்டும். எந்த அலுவலகத்துக்கும் போகக்கூடாது, பள்ளி, கல்லூரிக்கு போக்கக்கூடாது. சாதாரண மக்கள் கூடும் எந்த இடத்துக்கும் செல்லக்கூடாது
இந்த CORONA VIRUS-பரவிய CHINA, SOUTH KOREA-நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களை SELF ISOLATION-மூலமாக மற்றவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு தனிமையாக வைத்ததினால் அந்த நோய் பரவுவதை தடுத்துள்ளார்கள்.
அதனால் தான் அரசு SELF ISOLATION-முறையை நாமும் நடைமுறை செய்யவேண்டும் என்று ஆணையிட்டு உள்ளார்கள்

ஒருவர் தன்னை SELF ISOLATION-என்ற நிலையில் எப்படி வைத்துக்கொள்ளவேண்டும்?
SELF ISOLATION- இன் குறிக்கோள் என்ன? ஒருவர் மற்றவர்களிடம் இருந்து எவ்வளவுக்கு எவ்வளவு தள்ளி இருக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு தூரம் தள்ளி இருக்க வேண்டும் என்பதாகும்.
இதை உங்கள் வீட்டுக்குள் என்று எடுத்துக்கொண்டால், வீட்டில் உங்களை சார்ந்தவர்கள் மாத்திரமே இருக்க வேண்டும். மற்ற உறவினர்கள், நண்பர்கள் யாரும் இந்த SELF ISOLATION காலமான 2 வாரங்களுக்கு உங்கள் வீட்டுக்கு வரக்கூடாது.
அதேமாதிரி ஒருவேளை நீங்கள் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தால், அந்த ஹோட்டலில் வேலை செய்பவர்களிடமோ, மற்றவர்களிடமோ தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது.
உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால் நீங்கள் அதை மற்றவர்களிடம் கேட்டு அவர்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளாமலே உங்களுக்கு தேவைப்பட்ட பொருளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் இந்த வைரஸ் பரவுவதை தடுக்க, நாம் எங்கெங்கே எந்தெந்த பொருளை தொடுகிறோமோ, அவற்றை எல்லாம் சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். இன்னொன்று அடிக்கடி கைகளை கழுவிக்கொள்ள வேண்டும். இதனால் இந்த கிருமி மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கும்.

இந்த மாதிரி SELF ISOLATLION- நிலைமையில் வீட்டுக்குள்ளேயோ, ஹோட்டலிலோயோ இருக்கும் போது MASK அணிந்து கொள்ளவேண்டியது அவசியமா?அந்த மாதிரி தனியாக இருக்கும்போது MASK அணிய தேவையில்லை. ஆனால், வெளியே போக வேண்டிய அவசியம் இருந்தால், மற்றவர்கள் உங்களுடன் தொடர்பு கொள்ள நேரிடும் என்று இருந்தால், MASK அணிந்து கொள்வது நல்லது.
சில சமயங்களில் வீட்டில் ஒரே படுக்கைதான் இருக்கிறது. அதில்தான் இரண்டு பேர் உறங்க வேண்டும் என்ற நிலையில் SELF ISOLATION- ல் இருக்க வேண்டியிருந்தால் என்ன செய்வது?ஒரே படுக்கையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதுதான் ஆரோக்கியமான நிலைமை என்பது சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையாகும். எனவே படுக்கையை பகிர்ந்து கொள்ளக்கூடாது.
ஒருவர் SELF ISOLATION-ல் இருக்கும் நிலையில், அவர் வீட்டிலேயே இருக்கும் மற்றவர்களும் SELF ISOLATION-ல் இருக்க வேண்டுமா?மற்றவர்கள் வெளிநாட்டில் இருந்து வரவில்லை அல்லது அவர்கள் இந்த நோய் உள்ளவர்கள் யாரிடமும் தொடர்பு இல்லையென்றால் அவர்களும் SELF ISOLATION-ல் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

முதலில் இந்த நோய் வந்திருப்பதற்கான அறிகுறிகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதாவது, காய்ச்சல், இருமல், தொண்டை வறண்டு இருக்கும், மற்றும் களைப்பாக இருக்கும், மூச்சு விட கடினம் போன்ற அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை பார்க்க வேண்டியது அவசியம்.
இதில் முக்கிய அவசியம் என்னவென்றால்,அந்த மாதிரி மருத்துவரை பார்க்க செல்ல வேண்டும் என்றால், முன் கூட்டியே தொலைபேசி மூலமாக மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு உங்களின் நிலைமையை தெரிவித்துவிட்டுதான் செல்ல வேண்டும். உங்கள் வருகைக்கான ஏற்பாடு செய்வதற்கு அவர்களுக்கு அது உதவும்.
உங்களுக்கு COVID-19 நோய் வந்திருக்கலாம் என்று சந்தேகம் வந்தாலும் சரி அல்லது உறுதியாக தெரிந்தாலும் சரி, உங்களுக்கு வேறு எந்த நோய் பிரச்சனையும் இல்லை என்றாலும்கூட, நீங்கள் வீட்டுக்குள் SELF ISOLATION-ல் இருக்க வேண்டும்.
இந்த நிலையில், வீட்டில் மற்றவர்கள் இருக்கும்போது MASK அணிவது அவசியம்.
முடிந்தால் வீட்டில் வாழும் மற்றவர்கள் வேறு எங்காவது மாறிப்போவது நல்லது. அது முடியாது என்றால், அவர்கள் வேறு அறையிலாவது இருப்பது அவசியம். முக்கியமாக நோய் உள்ளவரிடம் இருந்து எவ்வளவுக்கு எவ்வளவு தனியாக இருக்க முடியுமோ அவ்வளவு நல்லது.

முடிந்தவரை வீட்டை விட்டு வெளியே போகாமல் இருப்பது நல்லது. ஆனால், MASK அணிந்து கொண்டு நாளுக்கு ஒருமுறை வீட்டை சுற்றி ஒரு நடை போகலாம். முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது இந்த கிருமி மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஒருவர் தன்னை SELF ISOLATION-க்கு உட்படுத்தவில்லை என்றால் அதற்கான தண்டனை எதுவும் இருக்கிறதா?ஆம்,ஒவ்வொரு மாநிலமும் பல விதமான தண்டனைகளை விதிக்கலாம்.
உதாரணமாக NSW மாநிலத்தில் இதற்கான தண்டனை ஆறு மாத சிறையுடன் 11,000 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
WESTERN AUSTRALIA மாநிலத்தில் இதற்கான தண்டனை 50,000 டாலர்கள் அல்லது 12 மாதங்கள் சிறை என்று இருக்கிறது.
COMMONWEALTH அரசின் HUMAN BIOSECURITY CONTROL ORDER சட்டத்தின் படி இதற்கான தண்டனை 5 வருட சிறையில் இருந்து 63,000 டாலர்கள் அபராதமும் இருக்கிறது.
ஆனால் மக்கள் இதுவரை இந்த SELF ISOLATION நிலையை ஒழுங்காகதான் கடைப்பிடித்து வருகிறார்கள் என குறிப்பிடப்படுகிறது.
