வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் அனைவரும் மருத்துவ ரீதியாக 14 நாட்கள் தம்மைத்தாமே வீடுகளில் அல்லது தாம் தங்கியிருக்கும் இடங்களில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஸ்கொட் மொறிஸனால் அறிவிக்கப்பட்ட இப்புதிய சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
குயின்ஸ்லாந்து விமானநிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்திறங்குபவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழைக்காவிடின் அவர்களுக்கு பொதுமக்கள் சுகாதார சட்டத்தின் கீழ் 13 ஆயிரம் டொலர்கள் அபராதம் அறவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மருத்துவ சுகாதார சட்டங்களை மீறுபவர்களுக்கு 11 ஆயிரம் டொலர்கள் வரையான அபராதமும் 6 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
இதேவேளை, தெற்கு ஆஸ்திரேலியாவில் இந்தக்குற்றத்தை இழைப்பவர்களுக்கு 25 ஆயிரம் டொலர்கள் வரையிலான அபராதம் அறவிடப்படும்.
மேற்கு ஆஸ்திரேலியாவில் இந்தக்குற்றத்துக்கான தண்டனை மிகவும் கடுமையானது என்றும் மேற்கு ஆஸ்திரேலிய விமானநிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வந்து இறங்குபவர் மருத்துவ ரீதியான தனிமைப்படுத்தலுக்கு இணங்காவிட்டால், அவருக்கு 50 ஆயிரம் டொலர் தண்டப்பணம் அல்லது 12 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை வழங்க சட்டத்தில் இடமுண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Share
