SKIP TO MAIN CONTENT

இறைச்சியை பழம் என்று தெரிவு செய்து திருடுபவர்கள் ஜாக்கிரதை!

2016ஆம் ஆண்டு 4.5 பில்லியன் டாலர்கள் பெருமதிமிக்க பொருட்கள், வர்த்தக நிலையங்களில் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Self service checkouts
Source: ABC Australia

1 min read

Published

By Selvi



Skip to article content

வர்த்தக நிலையங்களில்  தற்போது வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களை தாங்களே பில் போட்டுக்கொள்ளும் Self-service checkoutகள் உள்ளன.  Self-service checkoutயை பாவிக்கும் போது வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களை தாங்களே scan செய்ய வேண்டும்.  அவ்வாறு செய்யும் போது சிலர் பிழையான பொருளின் விலையை தெரிவு செய்து குறைந்த பணத்தை செலுத்துகின்றனர் என்றும் அது இரண்டு  டாலர்களாக இருந்தாலும் கூட அது திருட்டு என்றும் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் நிதீமன்றத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று NSW போலீஸ் கூறுகிறது.

இதேபோல் ஜெர்மனியில் வர்த்தக நிலையம் ஒன்றில் உள்ள Self-service checkoutயை பாவித்து 47 யூரோ பெருமதியான இறைச்சியை பழம் என்று தெரிவு செய்து வாங்கிய 58 வயது நபருக்கு ஜெர்மனியின் Munich மாவட்ட நீதிமன்றம் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now