SKIP TO MAIN CONTENT

செல்ஃபி எடுக்க முயன்ற ஆஸ்திரேலியர் மற்றும் மனைவி பலி!

South beach on the 26th May 2018 in Ericeira in Portugal. Ericeira is a civil parish and seaside resort/fishing community on the western coast of Portugal.
South beach on the 26th May 2018 in Ericeira in Portugal. Ericeira is a civil parish and seaside resort/fishing community on the western coast of Portugal. Source: Getty Images

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

போர்த்துகல் நாட்டிற்கு சுற்றுலாச் சென்ற ஆஸ்திரேலியர் ஒருவரும் அவரது மனைவியும் செல்ஃபி எடுக்க முயன்றபோது  தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

போர்த்துகலில் சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமான கடற்கரை ஒன்றை ஒட்டியிருக்கும் சுவரிலிருந்தவாறு செல்ஃபி எடுக்க முயன்றபோது கைத்தொலைபேசி கீழே விழுந்திருக்கலாம் எனவும் அதை எடுக்க முயன்றபோது அவர்கள் கீழே விழுந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

ஆரம்பத்தில் குறித்த தம்பதியர் இருவரும் ஆஸ்திரேலியர்கள் என தெரிவிக்கப்பட்டபோதிலும் பின்பு கணவன் மட்டுமே ஆஸ்திரேலியர் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

தலைநகர் லிஸ்பனின் அருகிலிருக்கும் இரிசெய்ரா நகரத்திலுள்ள இந்த 40 மீட்டர் உயரச் சுவரிலிருந்து சுற்றுலாப்பயணிகள் விழுவது இது முதல்முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.  


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now