ஆஸ்திரேலியாவில் கல்வி கற்பதற்கு என்னென்ன கடனுதவிகள் உள்ளன?

Mid-adult man nailing in table

Mid-adult man nailing in table Source: AAP

ஆஸ்திரேலியாவிலுள்ள 90வீதமான தகுதிவாய்ந்த மாணவர்கள் தமது பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்வதற்கு அரசின் கல்விக்கடன் சேவைகளை பயன்படுத்துகிறார்கள். இதற்கென பலவகைப்பட்ட கடனுதவிகள் அரசால் வழங்கப்படுகின்றன.

ஒரு மாணவர் 3 வருட இளங்கலைப் பட்டப்படிப்பை (Undergraduate degree )மேற்கொள்வதற்கு 32,000 டொலர்களை செலவிட வேண்டும். மருத்துவப்படிப்பு என்றால் 60,000 டொலர்கள் வரை செலவாகும்.

aap
Source: AAP


Advertisement
உயர்கல்வி கற்கவிருக்கும் மாணவர்களுக்கு Commonwealth supported place (CSP) மற்றும் fee paying place என இரண்டு வகைகளில் அனுமதி வழங்கப்படுகிறது. Commonwealth supported place (CSP) க்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமை கொண்டவர்களும் குடியுரிமை உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். இது அரச மானியத்துடன்கூடிய சலுகை என்பதால் செலவு குறைந்ததாகும்.

இது தவிர Higher Education Loan Programme( HELP) என அழைக்கப்படும் உயர்கல்விக்கான கடனுதவித்திட்டத்தின் கீழ் 5 பிரிவுகளில் கடன் வழங்கப்படுகிறது.

Group of college students in circle view from below
Group of college students in circle, view from below Source: AAP


இதில் முக்கியமானது HECS-HELP என்ற கடனுதவியாகும். ஆஸ்திரேலியக் குடியுரிமை உள்ள எவரும் இந்தக் கடனுதவியைப் பெறலாம்.

இந்த கடனுதவியைப் பெற்ற மாணவர், வேலை செய்ய ஆரம்பித்து ஆண்டொன்றுக்கு 54,000 டொலர்களுக்கு மேல் ஊதியம் பெற ஆரம்பிக்கும் போது அதிலிருந்து 4வீதத்தை Repayment ஆக கடன்தொகை முடியும்வரை அரசு எடுத்துக்கொள்ளும்.

HECS-HELP என்ற கடனுதவி தவிர FEE-HELP, SA-HELP, OS-HELP, VET-FEE HELP என்ற இன்னும் 4 கடனுதவிகள் இருக்கின்றன. இதற்கு மேலதிகமாக மாணவர்கள் தமது வாழ்க்கைச் செலவுக்கான உதவிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

அனைத்து HELP வகை கடனுதவிகளும் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அத்துடன் மனிதாபிமான அடிப்படையில் உள்வாங்கப்பட்டவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

AAP
Source: AAP


மேலும் குறிப்பிட்ட ஒரு பல்கலைக்கழகத்தில் பாடநெறி ஒன்றைக் கற்க விரும்பும் மாணவன் அதற்கென வழங்கப்படும் கால அவகாசத்திற்குள் தான் அந்தப் படிப்பைத் தொடரப்போகிறாரா இல்லையா என்பதை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இதன்மூலம் தேவையற்ற கடன்சுமையை அந்த மாணவன் தவிர்த்துக்கொள்ளலாம்.

இதேவேளை மாணவர்களுக்கான கல்விக்கடன் உதவி முறைகளில் அடுத்த ஆண்டு முதல் சில மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.

குறிப்பாக இங்கு கல்விகற்றுவிட்டு வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் மாணவர்களும் தமது கல்விக்கடன்களை திரும்பச் செலுத்த வேண்டும். அத்துடன் 54,000 டொலர்களுக்குக் குறைவாக சம்பளம் பெற்றாலும் கல்விக்கடனைச் செலுத்த வேண்டுமென்ற நிபந்தனையும் கொண்டுவரப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

For more information about student loan schemes visit:

For more information about Australia's universities visit:

 

 Share
Published 10 March 2016 at 8:45pm
Presented by Renuka.T