கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக நாடு திரும்பமுடியாமல் ஆஸ்திரேலியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.
நாடுதிரும்பமுடியாமல் வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை வரவழைப்பதற்கென மேற்கொள்ளப்படும் 'Vande Bharat Mission' திட்டத்தின்கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி முதற்கட்டமாக நாளை மே 21 முதல் மே 28 வரையான காலப்பகுதியில் ஒரு தொகுதி இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ஏழு ஏர் இந்தியா விமானங்கள் செல்லவுள்ளன.
சிட்னி மற்றும் மெல்பேர்ன் நகரிங்களிலிருந்து இவ்விமானங்கள் புறப்படுகின்றன.
இந்தியா திரும்புவதற்கு விண்ணப்பித்தவர்களின் நிலைமைகள் பரசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அதிக தேவையிலுள்ளவர்கள் என்ற அடிப்படையில் முன்னுரிமையளிக்கப்பட்டு குறித்த விமானங்களில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

A snapshot of flight details Source: Twitter/ Indian High Commission
இதற்கு மேலதிகமாக கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் அற்றவர்களே விமானத்தினுள் ஏறுவதற்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை குறித்த விமானங்களில் செல்பவர்கள் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
