SKIP TO MAIN CONTENT

Solar Panel வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டுமா?

Solar panels on rooftops in northwest Sydney.
Solar panels on rooftops in northwest Sydney. Source: AAP

4 min read

Published

Updated

By Mohammed Yusuf


Skip to article content

சமீபத்தில் Australian Energy Market Commission (AEMC) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இனிமேல் SOLAR PANEL வைத்திருப்பவர்கள் மீது கட்டணம் திணிக்கப்படலாம் என்று கூறியுள்ளார்கள். அது எதனால்?

ஆஸ்திரேலியாவில் சுமார் 10 - 15 வருடங்களுக்கு முன் வீடுகளில் SOLAR PANEL வைப்பது மிகவும் குறைவாக இருந்தது. அதை ஊக்குவிப்பதற்காக பல மாநில அரசுகளும், மத்திய அரசும் பலவிதமான திட்டங்களை கொண்டுவந்தன.

மேலும் காலப்போக்கில் SOLAR PANEL-களின் விலைகளும் குறைய ஆரம்பித்தன. இப்பொழுது வீடுகளில் SOLAR PANEL மிகவும் அதிகமாகி உள்ளது. மேலும் பல நிறுவனங்களும் இதை ஒரு லாப நோக்கு வணிகமாக மிகப் பெரிய அளவில் SOLAR PANEL களை நிறுவி உள்ளன.

இப்போது பிரச்சினை என்னவென்றால் சில நேரங்களில் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் மின்சக்தி மிக அதிகமாகி விடுவதால் அது மின்சார கட்டுமானத்தில் அது ELECTRICITY TRAFFIC JAM ஐ ஏற்படுத்துகிறது என்றும், அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு SOLAR PANEL வைத்திருப்பவர்கள் மீது கட்டணம் விதிக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்கள்.

solar energy, community solar gardens, western sydney, filipino
A Austrália deve contar em grande parte com energia solar para zerar suas emissões líquidas. Source: Getty Images

ELECTRICITY TRAFFIC JAM என்றால் என்ன?

இதை புரிந்துகொள்ள சாலை போக்குவரத்தை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.

சாலையில் பொதுவாக ஒரே திசையில்தான் வாகனங்கள் செல்கின்றன என்று வைத்துக்கொள்வோம். எதிர் திசையில் அதிகமாக வாகனங்கள் வருவதில்லை. எனவே போக்குவரத்தில் பிரச்சினை-TRAFFIC JAM இருப்பதில்லை.

அதே சாலையில் காலப்போக்கில் எதிர் திசையில் வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டால் முன்பு இருந்தது போல் போக்குவரத்து இலகுவாக இருப்பதில்லை. TRAFFIC JAM ஏற்படுகிறது.

அதேமாதிரி நிலைமைதான் சூரிய ஒளி மின் சக்தி உற்பத்தியினால் ஆகியுள்ளது.

மின்சாரம் உற்பத்தியாகும் இடத்தில் இருந்து உபயோகிக்கப்படும் இடத்துக்கு வருவது வழிப்பாதை மாதிரி. மின்சாரம் ஓரிடத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. பிறகு அது மின் கம்பிகள் மூலமாக பல இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உபயோகிப்பவரின் இடத்துக்கு வருகிறது. அதாவது மின் நிலையத்தில் உருவாகி வீட்டுக்கு வருகிறது.

ஆனால் ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு மின்சாரம் போகும்படி அவை கட்டப்படவில்லை. அதுதான் ONE WAY TRAFFIC. ஆனால் தற்பொழுது சூரிய மின் உற்பத்தியினால் நடப்பது வேறு.

சூரிய மின்சக்தி கிடைக்காத நேரத்தில் ஒருவர் வீட்டுக்கு மின் நிலையத்தில் இருந்து கம்பிகள் வழியாக மின்சாரம் வருகிறது. சூரிய மின்சக்தி கிடைக்கும் போது அவர் வீட்டில் இருந்து உருவாகும் மின்சாரம் அதே கம்பிகள் வழியாக வேறு ஒருவரின் உபயோகத்துக்காக கொண்டு செல்லப்படுகிறது. அதாவது இப்பொழுது இது TWO WAY TRAFFIC-ஆக மாறிவிட்டது.

Solar power systems on Australia's homes and businesses could provide electricity for 1.8m homes.
Solar power systems on Australia's homes and businesses could provide electricity for 1.8m homes. Source: AAP

SOLAR PANEL களின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோது அந்த மின்சாரம் ஏற்றுமதி ஆனதில் அப்பொழுது பிரச்சினை இல்லாமல் இருந்தது. இப்போது SOLAR PANEL களின் எண்ணிக்கை மிக அதிகமாகி விட்டன. பல நிறுவனங்கள் வணிக முறையிலும் இதை நிறுவி உள்ளன. இதனால் மின் கம்பிகளில் எதிர் திசையில் மின்சாரம் செல்வது அதிகமாகி உள்ளது. இது மின்சாரா கட்டுமானங்களில் அதிக அழுத்தத்தை கொடுப்பதால் அதை ELECTRICITY TRAFFIC JAM என்று கூறுகிறார்கள்.

இப்படி வீட்டில் இருந்து மின்சக்தி மின் கம்பிகளில் ஏற்றுமதியாவதால் என்ன பிரச்சினை?

எதிர் திசையில் ஓரளவு மின்சாரம் ஏற்றுமதியானால் பரவாயில்லை. ஏனென்றால் ஒரு வீட்டில் உருவாகும் மின்சாரம் பக்கத்து வீட்டிலோ, பக்கத்து தெருவிலோ அல்லது பக்கத்து நகரில் கூட உபயோகமாகி விடும்.

ஆனால் எல்லோருடைய வீட்டிலும் உற்பத்தி செய்யப்பட்டு அது ஏற்றுமதியானால் மின் கட்டுமானங்களில்  ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதனால் மின் அழுத்தம் VOLTAGE அதிகமாகிறது. அதனால் மின் கட்டுமானங்களின் பாதுகாப்புக்காக, மின்சார போக்குவரத்து AUTOMATIC ஆக துண்டிக்கப்படுகிறது. ஆக மின்சார விநியோகத்தில் ஒரு நிலையின்மை ஏற்படுகிறது.

அப்படியானால் SOLAR PANEL ல் உற்பத்தியாகும் மின்சாரம் என்னவாகிறது?

மின்சார விநியோகத்தில் ஒரு நிலையின்மை ஏற்படுகிறபோது SOLAR PANELல் உற்பத்தியாகும் மின்சாரம் ஏற்றுமதி ஆவதில்லை. ஆக பகல் நேரங்களில் சூரிய ஒளியினால் மின் சக்தி கிடைக்க அதிக வாய்ப்பு இருந்தும், மின் சக்தி தேவை இல்லாமல் போவதால், SOLAR PANEL எந்தவித உபயோகமும் இல்லாமல் போய்விடுகிறது.

It is good to clean the washing machine regularly
Shot of a washing machine at home Source: getty images

இந்த நிலையில் பகல் நேரத்தில் SOLAR PANEL ல் உருவாகும் மின்சாரத்தை உபயோகப்படுத்த என்னதான் வழி ?

இதற்கு ஒரே வழி என்று தீர்மானமாக ஒன்று கிடையாது. இதற்கு பல முறைகளில் பல வகைகளில் தீர்வு காணவேண்டும்.

சூரிய மின்சக்தி அதிகப்படியாக உற்பத்தியாகும் நேரத்தில், வீட்டில் உள்ள WASHING MACHINE, DRYER போன்ற சாதனங்களை உபயோகப்படுத்தலாம்.

ஆனால் இது நடைமுறைக்கு சரி வராது. அதனால்தான் மின் நிறுவனங்கள் தங்களது மின் கட்டுமானங்களை மேம்படுத்த வேண்டும். உதாரணமாக மின் கம்பிகளை வலுப்படுத்துவது, அதிக மின் அழுத்தத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் TRANSFORMER களை மாற்றுவது, மற்றும், மின்கலங்கள் BATTERIES அமைப்பது.போன்றவைகளை தற்பொழுது மின்சார நிறுவனங்கள் செய்து வருகின்றன.

மின் கட்டுமானங்களை மேம்படுத்துவது என்பது நீண்ட கால மற்றும் அதிக மூலதனம் தேவைப்படும் திட்டங்கள். தற்பொழுது இந்த இடைக்காலத்தில் என்ன நடக்கிறது?

தற்பொழுது சில இடங்களில் மின் நிறுவனங்கள் SMART SOLAR PANEL களை அமைத்துள்ளன. இந்த SOLAR PANEL கள் உற்பத்தி செய்யும் மின்சக்தியின் அளவை மின் நிறுவனங்களால் தூரத்தில் இருந்தே கட்டுப்படுத்த முடியும். எப்பொழுது மின்சக்தி தேவை அதிகம் இல்லையோ அப்பொழுது SOLAR PANEL களில் இருந்து உருவாகும் மின்சக்தியை அவர்களால் குறைக்க முடிகிறது.

South Australia மாநிலத்தில் சில இடங்களில் இது தற்பொழுது நடை முறையில் உள்ளது.

Woman going through bills, looking worried
Consider the potential for interest rate rises when calculating how much you can realistically borrow. Source: Getty Images/urbazon

ஆனால் இதற்காக வாடிக்கையாளர்கள் மீது ஏன் கட்டணம் விதிக்க வேண்டும்?

இது வாடிக்கையாளர்கள் மீது விதிக்கப்படும் கட்டணம் என்று சொல்வதை விட, அவர்களுக்கு கொடுக்கப்படும் விலை குறைக்கப்படுகிறது என்று சொல்லலாம்.

உதாரணமாக தற்பொழுது ஒரு யூனிட் ஏற்றுமதிக்கு 8, 10 சென்ட் கொடுக்கப்படுகிறது என்றால், அதாவது சூரிய மின்சக்தி தேவைப்படாத நேரத்தில் அது 2 சென்ட்டாக குறைக்கப்படும்.

இதனால் SOLAR PANEL வைத்தவர்களுக்கு நஷ்டம்தானே?

ஆம். ஆனால் இது ஒரு மிக அதிக தொகை இல்லை என்று அவர்கள் கணித்துள்ளார்கள். SOLAR PANEL வைத்திருக்கும் ஒருவருக்கு வருடத்தில் சுமார் 1000 டாலர்கள் கிடைக்கிறது என்றும், அதில் இந்த புதிய கட்டணத்தால் 70 டாலர்கள் குறையும் என்று கூறுகிறார்கள்.

மேலும் இந்த புதிய கட்டணத்தினால் வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிலேயே மின்கலன்களை வைத்துக்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் இந்த திட்டம் நடைமுறைக்கு ஒவ்வாது என்றும், இதனால் மக்கள் SOLAR PANEL வைத்துக்கொள்வதையே நிறுத்தி விடுவார்கள் என்றும் வேறு சில நிபுணர்கள் கருதுகிறார்கள்.

மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் பொது, ஆஸ்திரேலியாவில் SOLAR PANELக்கான வரவேற்பு எப்படி உள்ளது?

மிக அதிகம் என்றே சொல்லலாம். ROOF TOP SOLAR PANEL என்பது இந்த நாட்டில் மிக பிரபலமாகி உள்ளது.

அதே சமயம், SOLAR மின் சக்தி தொழில்நுட்பத்திலும் ஆஸ்திரேலியா மற்ற நாடுகளுக்கு வழி காட்டும் வகையில் முன்னால் நிற்கிறது.

ஒரு நாட்டின் மக்கள் தொகையை வைத்து பார்த்தால், உலகின் மற்ற நாடுகளை விட இந்த நாட்டில்தான் மிக அதிகமாக சூரிய மின்சக்தி உற்பத்தியாகிறது.

இந்த நாட்டில் உற்பத்தியாகும் மொத்த சூரிய மின் சக்தியை சேர்த்து பார்த்தால் அது எந்த ஒரு தனி மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவை விட அதிகம்.

ஆக, சூரிய மின்சக்தி உற்பத்தியில் ஆஸ்திரேலியா உலகிற்கே ஒரு வழிகாட்டியாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now