அடிலெய்ட் முதல் Northern Territory வரைக்கும் நாட்டின் கிழக்குக்கரையோரங்களில் வசிக்கும் மிகப்பிரபலமான Eastern Brown கொடிய நச்சுப்பாம்பு வகையைச் சேர்ந்த Silver Eastern Brown முதன் முறையாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் அறுபது சதவீதமான பாம்புக்கடி சாவுகளுக்கு காரணமான உலகின் இரண்டாவது கொடிய நச்சுப்பாம்பு Eastern Brown என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப்பாம்பு brown நிறமுடையது என பெயரளவில் அறியப்பட்டாலும் இது பல்வேறு நிறங்களில் காணப்படுவதாகவும் நியூ சவுத் வேல்ஸில் கண்டுபிடிக்கப்பட்டது வெள்ளி நிறத்தில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தின் East Cessnock என்ற இடத்தில் இந்தப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
