SKIP TO MAIN CONTENT

தடுப்பூசி போட்டுக்கொண்டோர் இன்று முதல் சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியா வரலாம்!

A Singapore Airlines Airbus A350-900 aircraft takes off at Kingsford Smith International airport on 5 August, 2020 in Sydney.
A Singapore Airlines Airbus A350-900 aircraft takes off at Kingsford Smith International airport on 5 August, 2020 in Sydney. Source: Getty

3 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலியா - சிங்கப்பூர் இடையே மேற்கொள்ளப்பட்ட பயண ஏற்பாட்டின்கீழ் சிங்கப்பூரிலிருந்து, இன்று முதல், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் ஆஸ்திரேலியா(விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ்) வரலாம். அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.

ஆனால் ஆஸ்திரேலியா வருவதற்கு முன்னர், சிங்கப்பூர் பயணிகள் கோவிட் சோதனையை மேற்கொண்டு தமக்கு தொற்று இல்லையென்பதை நிரூபிக்க வேண்டும்.

இதனடிப்படையில் சிங்கப்பூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த விமானங்கள், சிட்னி மற்றும் மெல்பனில் இன்று தரையிறங்கியுள்ளன.

இன்றையதினம் வருகைதந்துள்ளவர்களில், ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும் மாணவர்களும் அடங்குகின்றனர்.

கொரோனா பரவலையடுத்து வெளிநாட்டு மாணவர்கள் மீண்டும் ஆஸ்திரேலியா வரமுடியாமலிருந்த பின்னணியில், தற்போது சிங்கப்பூர் மாணவர்கள் இங்கு வருவதற்கு வழியேற்பட்டுள்ளது.

இதுஒருபுறமிருக்க இரு நாடுகளுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்கீழ், கடந்த 8ம் திகதி முதல், ஆஸ்திரேலிய பயணிகள் சிங்கப்பூருக்குள் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடின்றி அனுமதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு சிங்கப்பூர் செல்லும் ஆஸ்திரேலிய பயணிகள் தமது விமானப்பயணத்திற்கு 48 மணிநேரங்களுக்கு முன்னதாக கோவிட் சோதனையை மேற்கொண்டு தொற்று இல்லையென்பதை நிரூபிக்க வேண்டுமென்பதுடன் சிங்கப்பூரை சென்றடைந்தவுடன்  மற்றுமொரு கோவிட் சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

நியூசிலாந்துடன் செய்துகொள்ளப்பட்ட தனிமைப்படுத்தல் கட்டுப்பாடற்ற பயண ஏற்பாட்டைத்தொடர்ந்து, இரண்டாவது நாடாக சிங்கப்பூருடன் இவ்வாறான பயண ஏற்பாட்டினை ஆஸ்திரேலியா மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now