SKIP TO MAIN CONTENT

சிங்கப்பூரில் இன்று காலை தூக்கிலிடப்பட்ட தமிழ் இளைஞன்!

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சிறையிலிருந்த மலேசிய தமிழ் இளைஞன் தர்மலிங்கம் நாகேந்திரன் இன்று புதன்கிழமை காலை தூக்கிலிடப்பட்டார்.

Nagaenthran Dharmalingham
Nagaenthran Dharmalingham Source: Supplied

2 min read

Published

Updated


Skip to article content

நாகேந்திரனின் சகோதரனுக்கு சிங்கப்பூர் அரசுத் தரப்பினர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக நாகேந்திரன் குடும்பத்தின் வழக்கறிஞர் சுரேந்திரன் SBS தமிழிடம் தெரிவித்தார்.

நாகேந்திரனின் வழக்கு தொடர்பில் அவரது தாயார் பாஞ்சாலை மேற்கொண்ட இறுதி நேர முயற்சிகள் அனைத்தும் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, நேற்று நீதிமன்ற கட்டடத்தில் நாகேந்திரனைக் கடைசியாகப் பார்வையிடுவதற்கு குடும்பத்தினருக்கு நேரம் அனுமதிக்கப்பட்டிருந்தது.

கண்ணாடி சுவரின் ஊடாக தனது குடும்பத்தினரைப் பார்த்து அழுத நாகேந்திரன், கடைசியாக "அம்மா" - என்று குழறி அழுதவாறு, அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

நாகேந்திரனுக்கு அவரது குடும்பத்தினர் வாங்கிக்கொடுத்த ஆடையை அணிவித்து புகைப்படம் எடுக்கப்பட்டு, அந்தப் புகைப்படங்கள் அவரது குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகேந்திரனின் மரண தண்டனையை நிறுத்துவதற்காகக் கடைசிவரை போராடிய மனித உரிமை அமைப்புக்கள் நேற்று மாலை மெழுகுவர்த்திகளால் அவரை நினைவேந்தினார்கள்.

42.7கிராம் ஹெராயின் போதைப் பொருளை சிங்கப்பூருக்குள் கடத்தி வந்த குற்றச்சாட்டின் பேரில் 2009ஆம் ஆண்டு நாகேந்திரன் கைதுசெய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 21.

அதைத்தொடர்ந்து பத்து ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் அவருக்கு 2019ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் நாகேந்திரனுக்கு இலேசான அறிவுசார் மாற்றுத்திறன் (Intellectual Disability) இருப்பதுடன், அவரது IQ அளவானது 69 புள்ளிகள் மட்டுமே உள்ளதாகவும், அவர் நுண்ணறிவு குறைபாடு உள்ளவர் என்பதுடன் இதுவும் ஒரு வகையான ஊனம் என்று வாதிட்ட நாகேந்திரன் தரப்பினர், இத்தகைய குறைபாடு உள்ளவர்களை தூக்கிலிடக்கூடாது என்று வலியுறுத்தினர்.

எனினும் நாகேந்திரனது மரண தண்டனையை நிறைவேற்றுவதில் எவ்வித மாற்றமும் இல்லை என சிங்கப்பூர் நீதிமன்றம் தெரிவித்ததுடன், நவம்பர் 2021 10ம் திகதி நாகேந்திரன் தூக்கிலிடப்படுவார் என அறிவித்தது.

ஆனால் இறுதிநேரத்தில் அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதால், தூக்குத்தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நாகேந்திரன் இன்று புதன்கிழமை காலை தூக்கிலிடப்பட்டார். 

Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14, 1800 Respect  on1800 737 732, Women's Crisis Line on 1800 811 811, Men's Referral Service on1300 766 491 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged up to 25). More information and support with mental health is available at Beyond Blue.org.au and on 1300 22 4636. 


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now