SKIP TO MAIN CONTENT

கோவிட் தொற்றுக்கான புதிய தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் வழங்கியது

புதிய கோவிட் தடுப்பூசி ஒன்றுக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

China's Sinopharm COVID-19 vaccine
Source: AAP, EPA

1 min read

Published

By Raysel

Source: ABC Australia


Skip to article content

சீனத்தயாரிப்பான Sinopharm என்ற இந்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உகந்தது என்று உத்தியோகபூர்வமாக அங்கீரம் வழங்கியுள்ள உலக சுகாதார நிறுவனமான WHO (World  Health  Organisation), அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி நம்பிக்கையளிக்கும் என்று பெரிதளவில் நம்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே சீனாவில் பல லட்சக்கணக்கானவர்களுக்கு உபயோகிப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள பீஜிங் நிறுவனத் தயாரிப்பான இந்த தடுப்பூசி அவசர தேவைக்கு பயன்படுத்தக்கூடியது என்று கோவிட் தடுப்பூசி பட்டியலில் உலக சுகாதார நிறுவனம் இணைத்துள்ளது.

கோவிட் தொற்றுக்கு தற்போது ஐந்து தடுப்பூசிகள் உலக சுகாதார நிறுவனத்தினால் அங்கீகரிகப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே, அங்கீகரிக்கப்பட்ட Pfizer-BioNTech, AstraZeneca, Johnson & Johnson, Moderna தடுப்பூசிகளுடன் சீனத்தயாரிப்பான Sinopharm புதிதாக இணைந்துகொண்டுள்ளது. மேற்கத்திய நாடுகளைத் தவிர்த்து பிற நாடு ஒன்றின் கொரோனா தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.

உலக சுகாதார நிறுவனத்தினால் Sinopharm என்ற இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கும் முன்னரே சீனா இந்த தடுப்பூசியை இலங்கை உள்ளிட்ட தான் செல்வாக்கு செலுத்தும் நாடுகளுக்கு வழங்கத் துவங்கிவிட்ட்து குறிப்பிடத்தக்கது. 

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now