SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவை அழகுற ஆவணப்படுத்தும் Sir David Attenboroughவிற்கு மரியாதை

கடந்த வெள்ளி இரவு நடந்த ஒரு விழாவில், ஆஸ்திரேலியா மீது அதிக ஆர்வமுள்ள Sir David Attenboroughவிற்கு மரியாதை செய்யப்பட்டது.

Sir David Attenborough honoured for contribution to Australia and Britain's relationship

2 min read

Published

By Kulasegaram Sanchayan



Skip to article content

இலண்டனில் உள்ள Australia House என்ற இடத்தில் Sir David Attenborough அவர்களுக்கு Britain-Australia Society விருது வழங்கப்பட்டது.

மூத்த ஒளிபரப்பாளர் மற்றும் இயற்கையைப் போற்றும் Sir David Attenborough, தன்னிடம் சிறுவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி என்ன என்று, தனது ஏற்புரையில் மீள்பார்த்தார். 

"அந்த கேள்விக்குப் பதிலளிப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை, எனக்கு பிடித்த இடமாக வட குயின்ஸ்லாந்து உள்ளது, இது இயற்கை வளம் செழித்த ஒரு இடம்.  இயற்கையை விரும்புபவர்களுக்கு அனைத்தும் உள்ள ஒரு இடம், உலகின் வேறு எந்த மழைக்காடுகளிலும் இல்லாத அற்புதமான தனித்துவத்தைக் கொண்ட ஒரு மழைக்காடு.

அது மட்டும் இல்லை ஆனால் கடற்கரை அருகில் மாபெரும் பவளப்பாறை உள்ளது.

அது தவிர, மிகவும் சுவையான திராட்சை ரசம் மற்றும் உணவு அங்கு இருக்கிறது, அதனால் அது தான் என்னை மிகவும் கவர்ந்த இடம்."

அது மட்டுமல்ல, சிறுவர்கள் கேட்கும் இன்னொரு கேள்விக்குத் தான் விடையளிக்கும் போது, தனக்கு மிகவும் பிடித்த விலங்கு, தெற்கு ஆஸ்திரேலியாவின் கடலோரத்தில் காணப்படும் இலை போன்ற வடிவம் கொண்ட leafy sea dragon என்று சொல்வதாக அவர் கூறுகிறார்.

91 வயதான இவர், எமது பவளப்பாறைகளை முதன்முதலாக 1950ல் பார்க்க வந்திருந்தார்.

Sir David Attenborough first dived on the Great Barrier Reef in the 1950s.
Sir David Attenborough first dived on the Great Barrier Reef in the 1950s. Source: Supplied

"உண்மையில், நான் இங்கிலாந்தில் பிறந்திருக்காவிட்டால், ஆஸ்திரேலியாவில் பிறந்திருக்கவே விரும்பியிருப்பேன்," என்று Sir David Attenborough ஆஸ்திரேலிய செய்தியாளர்களிடம் கூறினார்.

காலநிலை மாற்றத்தின் அபாயங்களையும் கடல்மட்டம் உயர்ந்து வருவதையும் தனது ஆவணப்படங்களில் தொடர்ந்து காட்டி வருகிறார் Sir David Attenborough.

"இது நிச்சயமாக ஆபத்தானது, இதே வேளை, உலகெங்கும் உள்ள இயற்கை இடங்களும் ஆபத்தில் உள்ளன.  வட குயின்ஸ்லாந்தில் கடந்த 50 ஆண்டுகளில் பாரிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன."

இயற்கையின் அதிசயங்களை மக்களுக்கு எடுத்துவருவதில், புதிய தொழில்நுட்பத்தை அவர் அழகுறப் பயன்படுத்தி வருகிறார்.

அண்மையில் virtual reality என்ற புதிய தொழில்நுட்பத்தை அவர் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.

The television presenter has spoken of the threats Earth is facing, including the eight million tonnes of plastic dumped into the sea each year.
The television presenter has spoken of the threats Earth is facing, including the eight million tonnes of plastic dumped into the sea each year. Source: AAP

ஆஸ்திரேலியாவைப் பற்றிய ஒரே குறை என்று, "அது மிக தொலைவில் உள்ளது" என்று கவலையுடன் கூறினார் Sir David Attenborough.

 

 

 

 

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now