மெல்பேர்ன் மேற்கு பிரதேசத்திலுள்ள Ravenhall Correctional Centre-இல் பணிபுரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து விக்டோரியாவின் ஆறு சிறைச்சாலைகளிலுள்ள கைதிகள் அவரவர் அறைகளில் முடக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைகள் தொற்று நீக்கம் செய்யப்படவிருப்பதால் இந்த நடவடிக்கை முற்றாக நிறைவுறும் வரையில் கைதிகள் அவரவர் அறைகளில் முடக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைக்குள் அவர்களது வழக்கமான நடமாட்டம் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகளுக்கு பொறுப்பான அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, சிறைச்சாலைகளிலுள்ள ஆபத்து குறைந்த கைதிகளை விடுதலை செய்வதன் மூலம் சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியை தளர்த்தலாம் என்றும் அது தற்போதைய கொரோனா தொற்றுக்காலத்தில் ஏற்படடுள்ள ஆபத்தினை குறைக்கும் என்றும் விக்டோரிய Greens கட்சியினரும் விக்டோரிய சட்டத்தரணிகள் சங்கமும் விக்டோரிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
