பப்புவா நியூ கினியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்தும் அதிகரித்துவரும் பின்னணியில் அங்குள்ள அகதிகள் பலருக்கும் இத்தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பப்புவா நியூ கினியின் மனுஸ் தடுப்புமுகாமில் முன்னர் தடுத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 6 அகதிகளுக்கு கோவிட்-19 தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்று இனங்காணப்பட்டவர்கள் ஹோட்டல் மற்றும் வேறு தங்குமிடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை பப்புவா நியூ கினியில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் உடனடியாக ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
கடந்த 2013 மற்றும் 2014 காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவிலிருந்து மனுஸ் தீவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட அகதிகளில் சுமார் 130 பேர் இன்னமும் பப்புவா நியூகினியிலேயே வாழ்ந்துவருவதாக குறிப்பிடப்படுகிறது.
இதுஒருபுறமிருக்க பப்புவா நியூ கினியில் ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடி நிலையைச் சமாளிக்கவென ஆஸ்திரேலிய அரசு சார்பில் 8000 AstraZeneca தடுப்பூசிகள், ஒரு மில்லியன் முகக்கவசங்கள், ஒரு லட்சம் sanitiser போத்தல்கள் உட்பட பல அத்தியாவசிய பொருட்கள் அனுப்பிவைக்கப்படுவதாக பிரதமர் ஸ்கொட் மொறிசன் இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
