டஸ்மேனியாவில் இடம்பெற்ற Jumping Castle விபத்தில் பலியான சிறுவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.
குழந்தைகள் துள்ளி விளையாடும் Jumping Castle- இலிருந்து பள்ளிச்சிறுவர்கள் தூக்கி வீசப்பட்ட சம்பவம் கடந்த வியாழக்கிழமை காலை டஸ்மேனியாவின் Hillcrest Primary பாடசாலையில் இடம்பெற்றது.
பள்ளியின் கடைசி நாளான்று மாணவ - மாணவிகளின் விடுமுறையையொட்டி பாடசாலையினால் ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டு நிகழ்விலேயே இந்தக் கொடூரம் இடம்பெற்றிருந்தது.
திடீரென்று வீசிய கடும் காற்றினால் மேலே பறந்த Jumping Castle-இலிருந்து வெளியே வீசப்பட்ட மாணவர்கள் சுமார் பத்து மீற்றர் உயரத்திலிருந்து விழுந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் ஏற்கனவே Addison Stewart(11), Zane Mellor(12), Jye Sheehan(12), Jalailah Jayne-Maree Jones(12), Peter Dodt(12) என்ற ஐந்து சிறுவர்கள் மரணமடைந்திருந்த நிலையில் Chace Harrison(11) என்ற சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இன்னும் இரண்டு சிறுவர்கள் கடும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Readers seeking support can contact Lifeline Australia on 13 11 14, Beyond Blue on 1300 224 636 or Kids Helpline on 1800 551 800.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
