ஆனால், பாம்புக்குத் தெரியாது Helaina Alati பாம்புகளைப் பிடிப்பதில் தேர்ச்சி பெற்றவர் என்பது.
விஷம் இல்லாத diamond python வகை மலைப் பாம்பின் தலை மசாலா பொருட்களுக்கு மத்தியில் வெளிப்பட்டதும் Helaina Alati முதலில் அதிர்ச்சியுற்றாலும், சுதாகரித்துக் கொண்டார்.
சிட்னியின் வடமேற்கு புறநகர் Glenorie இலுள்ள Woolworths சூப்பர் மார்க்கெட்டில் இந்த மலைப்பாம்பு காணப்பட்டதை Woolworths நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
எத்தகைய பாம்பு என்பதை அடையாளம் கண்ட Helaina Alati, சூப்பர் மார்க்கெட் ஊழியர்களிடம் அது குறித்து முறையிட முன்னர், அவரது கைத் தொலைபேசியில் அதனை வீடியோ எடுத்துக் கொண்டார்.
அருகிலிருந்த அவரது வீட்டிற்கு ஓடிச் சென்று பாம்பைப் பிடிக்கும் பையை எடுத்து வந்து, பொருட்களுக்கு நடுவே மீண்டும் பதுங்கிக் கொண்ட பாம்பைப் பிடித்தார் Helaina Alati. பின்னர் அருகிலுள்ள புதர்ப்குதிகளில் அதனை வெளியே நடமாட விட்டார்.
பாம்பு எப்படி அல்லது எப்போது சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்னர் சிட்னி வன விலங்கு மீட்பு அமைப்பில் தன்னார்வத் தொண்டராகக் கடமையாற்றிய Helaina Alati,
அந்தப் பாம்பு ஒரு ஆண் பாம்பு
என்றும்
தனக்கு ஒரு துணை தேடி அலைகிறது என்று தான் சந்தேகிக்கிறார்
என்றும் Helaina Alati கூறினார்.
