விந்தையான விந்து !

மனித விந்தின் அசாதாரணமான திறன்களையும் உடற்கூறியல் பற்றியும் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்துள்ளனர். தற்போதைய ஆராய்ச்சி, விந்தின் வாலில் இறக்கை போல உந்து சக்தி வழங்கும் ஓட்டுக்கருவி (propeller) போன்ற அமைப்பு ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது. இந்த சுழல் விந்தணு வால்கள், விந்துக்களுக்குத் தேவையான ஊக்கமளிக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Researchers found the mysterious structure in the sperm tails by using cryo-electron tomography.

Researchers found the mysterious structure in the sperm tails by using cryo-electron tomography. Credit: University of Gothenburg Source: Credit: University of Gothenburg

முடிந்தவரை விரைவாக நீந்தவும், முட்டையை மோதி அதனுள் செல்லவும் மிகவும் திறமையான வால் விந்தணுவுக்குத் தேவை. ஒவ்வொரு விந்தணு வாலிலும் ஆயிரக்கணக்கான கட்டுமானத் தொகுதிகள் உள்ளன, அவற்றில் மிக முக்கியமானவை டூபுலின்கள் (tubulins) என அழைக்கப்படுகின்றன.  இவை, விந்தணுவின் வாலில் உள்ள நீண்ட குழாய்களாக உருவெடுக்கின்றன.

இந்த நீண்ட குழாய்கள், அசையக் கூடிய புரதப் பொருட்களால் ஆனவை.  அவை இழுத்தும் மடிந்தும் செயற்படுவதால் விந்தணுக்கள் வேகமாகப் பயணிக்கக் கூடியதாக இருக்கிறது.

ஸ்வீடனில் உள்ள Gothenburg பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆராய்ச்சியாளர் Johanna Höög செய்த ஆய்வில் வியத்தகு உண்மை ஒன்றைக் கண்டு பிடித்துள்ளார்.  "விந்தணுக்கள் நீந்தும் பொருட்டு ஆயிரக்கணக்கான புரதப் பொருட்களின் இயக்கம், மிக மிக சிறிய அளவிலேயே ஒருங்கிணைக்கப்பட்டிருக்க வேண்டும்" என்கிறார் அவர்.

விந்தணு வாலின் தோற்றத்தை ஆராய, இந்த ஆராய்ச்சியாளர்கள் நோபல் பரிசு பெற்ற cryo-electron tomography அல்லது cryo-ET என அழைக்கப்படுகிற நுண்ணோக்கியைப் பயன்படுத்தி, 2D மற்றும் விரிவான 3D படங்களை உருவாக்கியுள்ளனர்.

இந்த புதிய ஆய்வு journal Scientific Reports என்ற அறிவியல் அறிக்கையில் பிப்ரவரி 9 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

Researchers have uncovered a previously unknown spiral-shaped nanostructure in human sperm tails.
Researchers have uncovered a previously unknown spiral-shaped nanostructure in human sperm tails. Credit: University of Gothenburg Source: Credit: University of Gothenburg

மனித விந்தணு வால்களில் முன்னர் தெரியாத சுருள் வடிவத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர், நன்றி: Gothenburg பல்கலைக்கழகம்.

விந்து பற்றி ஏழு உண்மைகள்

உண்ணும் உணவு விந்தைப் பாதிக்கும்

சில ஊட்டச்சத்துக்கள் விந்தின் தரம் மற்றும் அளவுக்கு நல்லது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  (docosahexnoic) டொகோஸாஹெக்ஸோனிக் அமிலம் அல்லது DHA என்று அழைக்கப்படும் கொழுப்பு அமிலம், விந்து உருவாவதற்கு அவசியம். வயதானவர்களுக்கு, ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த உணவு அல்லது மல்டி வைட்டமின், இதற்கு உதவலாம்.

விந்தணுக்கள் விசித்திரமான தோற்றம் கொண்டவை

பெரிய தலை, நீண்ட வால் விசித்திரமாகப் பட்டாலும், விந்தணுக்களில் குறைபாடுகள் மூன்று பகுதிகளிலும் ஏற்படலாம்: தலை, நடுப்பகுதி (கழுத்து) அல்லது வால் அல்லது இவற்றின் கலவை. உதாரணமாக, ஒரு குறைபாடுள்ள விந்து இரட்டை தலைகள், சிறிய அல்லது பெரிய தலை, வளைந்த கழுத்து, மெல்லிய இடைப்பகுதி, வளைந்து, உடைந்த அல்லது சுருக்கப்பட்ட அல்லது பல வால்கள் கொண்டதாக இருக்க முடியும்.

விலங்குகள் வென்று விட்டன

மனிதர்களின் விந்து விநோதமான தோற்றத்தை உடையதாக இருக்கலாம், ஆனால் வித்தியாசமான விந்தணுக்களுக்கான பரிசு விலங்கு இராச்சியத்திற்குச் செல்கிறது. சில வண்டுகளின் விந்தணுக்கள் தனியாகப் பயணிக்காமல் இணைந்து பயணிக்கின்றன.  சில எலிகளின் விந்தணுக்கள் வினோதமான தோற்றம் கொண்டவை மட்டுமல்ல பல விந்தணுக்களால் நீந்த முடியாது.  இருந்தாலும் அவை குழந்தை பெற்றுக் கொள்கின்றன.

விந்தணுவைக் கண்டுபிடித்தது ஒரு டச்சுக்காரர்

நுண்ணோக்கி மூலம் தனது சொந்த விந்தை ஆராய்ந்த Antony van Leeuwenhoek, 1677ம் ஆண்டு, முதல் முறையாக விந்தணுக்கள் குறித்து அறிக்கை வெளியிட்டார்.

தவறான சிந்தனைகள்

Antony van Leeuwenhoek விந்தணு குறித்து அறிக்கை வெளியிட முன், கருத்தரித்தல் செயல்முறை குறித்து பரவலாகத் தவறான கருத்து நிலவியது.  1879 ஆம் ஆண்டு தான் கருத்தரித்தல் செயல்முறை நிரூபிக்கப்பட்டது.  1600 களில், மனிதர்கள் முன்கூட்டியே உருவானதாக நம்பினர். மிகச் சிறிய மனிதர்கள் முட்டையில் இருப்பதாக சிலரும், விந்தணுவின் உள்ளே இருப்பதாக சிலரும் நம்பினார்கள்.

விந்தணுக்களுக்கு உதவி கிடைக்கிறது

விந்தணுக்கள் வலுவான நீச்சல்காரர்கள் என்றாலும் முட்டையை ஊடுருவி வரும் போது பெண்கள் தயாரிக்கும் progesterone என்ற இயக்குநீர் (ஹார்மோன்), விந்தணுக்கள் அதன் வால்களை வேகமாக அசைக்க உதவுகின்றன.

ஆஜானுபாகுவான ஆண்கள் எல்லாரிடமும் வீரியம் நிறைந்த விந்து இல்லை

ஆழ்ந்த குரலுடைய ஆண்களிடம் பெண்கள் ஆழ்ந்து ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் டிசம்பர் 2012ல் PLos ONE என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, கட்டைக் குரல் கொண்டவர்கள் உயர் சுருதி குரல் கொண்டவர்களை விட உயர்ந்த சிறப்பான விந்தணுத் தரங்களைக் கொண்டிருக்கவில்லை என்று கண்டுபிடித்துள்ளனர். உண்மையில், ஆழ்ந்த-குரல் கொண்ட ஆண்களின் விந்து செறிவு அதிக ஆண்களை விடக் குறைவாக இருந்தது.

 

 

 

 

 

 

 

 


2 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now