
Sunset on the last day of standard time Saturday, March 7, 2020, in Kansas City, Mo. Source: AP
நேர மாற்றம் ஆரம்பித்த வரலாறு
முதல் உலகப் போரின்போது எரிபொருளை சேமிப்பதற்காக, எம் நாட்டில் DST முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது, அதுமட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் DST பயன்படுத்தப்பட்டது. மீண்டும் இரண்டாம் உலகப் போரின்போதும் DST பயன்படுத்தப்பட்டது. 1967ஆம் ஆண்டில் டாஸ்மேனியாவில் ஏற்பட்ட வறட்சி காரணமாக கோடை காலத்தில் மீண்டும் DST அறிமுகப்படுத்தப்பட்டது; அதன் பின்னர் ஒவ்வொரு கோடை காலத்திலும் DST தொடர்கிறது.
டாஸ்மேனியாவைப் பின்பற்றி நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் ACT பகுதிகளில் 1971 ஆம் ஆண்டில் DST அறிமுகப்படுத்தப்பட்டது. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் Northern Territory அவ்வாறு நேர மாற்றம் செய்யவில்லை. குயின்ஸ்லாந்து 1972ஆம் ஆண்டில் DSTஐக் கைவிட்டது. முதலில் டாஸ்மேனியா மட்டுமே அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை DSTஐத் தொடங்கியது. மற்றைய மாநிலங்கள் அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை முடிவுக்குக் கொண்டு வந்தன. 

Statues of the official mascots for the Sydney 2000 Olympic Games Source: AAP
சிட்னி ஒலிம்பிக்ஸ் போட்டிகளும் மாற்றங்களும்
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் 2000ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த போது, DST தொடக்க தேதியை 27 ஆகஸ்ட் 2000 ஞாயிற்றுக்கிழமைக்கு NSW நகர்த்தியது. விக்டோரியா, SA மற்றும் ACT பகுதிகளில் 2008ஆம் ஆண்டு முதல், அக்டோபர் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை முதல் ஏப்ரல் மாத முதல் ஞாயிறு வரை என மேலும் நான்கு வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மாநிலம் 1989ஆம் ஆண்டிற்கும் 1992ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட மூன்று வருடங்கள் DSTஐ மீண்டும் அறிமுகம் செய்தது. அது குறித்த ஒரு பொது வாக்கெடுப்பு 1992ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி நடத்தப்பட்டது. வாக்களித்தவர்களில் 54.5 சதவீதமானோர், DST தேவையில்லை என்று வாக்களித்ததால் DST நேர மாற்றம் குயின்ஸ்லாந்தில் கைவிடப்பட்டது. ஆனால், இதனையே முதன்மைப் பொருளாக வைத்து ஒரு கட்சி ஆரம்பிக்கப்பட்டது. மாநிலத்தின் தன் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் DST முறையை விரும்பினார்கள். ஆனால் அது மாநில அளவில் பிரபலமடையவில்லை.
இதற்காக ஒரு கட்சியே ஆரம்பிக்கப்பட்டது
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் நான்கு முறை - 1975, 1984, 1992 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் இது குறித்து வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. நான்கு முறையும் DST தோல்வியைத் தழுவியது. குறைந்தது இன்னும் 2029ஆம் ஆண்டுவரை DST மாநிலத்தில் பரிசீலிக்கப்படாது என்று மாநிலத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Northern Territory பிரதேசம் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் DST பயன்பாட்டை பரிசோதித்தது. கடைசியாக, இந்தப் பிராந்தியத்தில் DST 1944ஆம் ஆண்டுதான் பயன்படுத்தப்பட்டது.

Dan LaMoore works on a Seth Thomas Post Clock at Electric Time Company, Medfield, MA, USA where he adjusts the clocks by one hour to accommodate DST.. Source: AP
நாளை (அக்டோபர் 3ஆம் தேதி) ஞாயிற்றுக் கிழமை, 2 மணி → 3 மணி ஆகிறது
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.