Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

தமிழ்க்குடும்பத்தின் நாடுகடத்தலைத் தடுக்கக்கோரும் மனு நிராகரிப்பு!

The Tamil Refugee Council said the family left Sri Lanka to escape a horrible situation.

The Tamil Refugee Council said the family left Sri Lanka to escape a horrible situation. Source: Tamil Refugee Council/Facebook

மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாமில் வைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தின் நாடுகடத்தலைத் தடைசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

புகலிடம்கோரி ஆஸ்திரேலியா வந்த நடேசலிங்கம்-பிரியா தம்பதி மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் 2 வயது மற்றும் பத்துமாத குழந்தைகள் பல காலமாக குயின்ஸ்லாந்தின் Biloela-வில் வாழ்ந்து வந்த நிலையில், அவர்களது bridging visa கடந்த தை - மாசி மாதமளவில் காலாவதியாகியிருந்ததையடுத்து, அவர்கள் நாடு கடத்தப்படும் நோக்கில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நடேசலிங்கம்-பிரியா குடும்பம் நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கடந்த மாதம் நடைபெற்றிருந்தநிலையில் இவ்வழக்கின் மீதான தீர்ப்பை அறிவித்துள்ள Federal Circuit நீதிமன்றம் குறித்த குடும்பத்தின் நாடுகடத்தலைத் தடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை நிராகரித்துள்ளது.

நடேசலிங்கம்-பிரியா குடும்பம் குறித்த தீர்ப்புக்கெதிராக 21 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்ய முடியும்.


1 min read

Published

Updated

Presented by Renuka



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now