SKIP TO MAIN CONTENT

இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களுக்கு ஒரு மாத கால விசா நீடிப்பு!

SL Visa
Source: SLIE

1 min read

Published

Updated


Skip to article content

கொரோனா வைரஸ் சிக்கலினால் நாட்டைவிட்டு வெளியேற முடியாமல் இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசாவை ஒரு மாதத்தினால் நீடிப்பு செய்வதாக இலங்கை குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த ஒரு மாத காலப்பகுதி மார்ச் மாதம் 14 ஆம் திகதி முதல் ஏப்ரல் 12 ஆம் திகதிவரையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டில் தங்கியிருப்பவர்கள் ஏப்ரல் மாதம் 8 ஆம் 9 ஆம் திகதிகளில் இலங்கை குடிவரவு - குடியகல்வு திணைக்களத்துக்கு வருகை தந்து விசா நீடிப்புக்கான பணத்தை செலுத்தி கடவுச்சீட்டில் அதற்குரிய அத்தாட்சி முத்திரையை பெற்றுக்கொள்ளும்படியும் அதற்கு முன்னரேயே நாட்டைவிட்டு வெளியேற விரும்புகின்றவர்கள் விமானநிலையத்தில் உரிய பணத்தைச்செலுத்த முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போதுவரை கொரோனா வைரஸினால் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now