SKIP TO MAIN CONTENT

கனடா வாகனத் தாக்குதலில் இலங்கைப்பெண் பலி!

Social Media

1 min read

Published

Updated

Presented by Renuka Thuraisingham



Skip to article content

கனடாவில் பத்துப் பேரைப் பலியெடுத்த வாகன தாக்குதல் சம்பவத்தில் இலங்கையர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக சுயாதீன செய்திவட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் இலங்கை ஹொரண பகுதியை சொந்த இடமாக கொண்ட 46 வயதான Renuka Amarasinghe என குறிப்பிடப்படுகிறது.

Toronto கல்விச் சபைக்காக கடமையாற்றும் இவர் 7 வயதுச் சிறுவனின் தாயார் எனவும் இவரது தாய், சகோதரி மற்றும் சகோதரன் ஆகியோர் இலங்கையில் வசித்து வருவதாகவும் தெரியவருகிறது.

மிகுந்த இறை நம்பிக்கையும் கடின உழைப்பும் கொண்ட இப்பெண்ணின் இறப்பு தமக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கனடா வாழ் இலங்கையர்கள் பலர் சமூகவலைத்தளங்களில் கவலை வெளியிட்டுள்ளனர்.

நேற்றைய தினம் Toronto மாநிலத்தில் சன நெருக்கடி மிகுந்த North York பகுதியில் பொதுமக்களின் மீது வாகனத்தை வேண்டுமென்றே ஓட்டிச்சென்று மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் 16 பேர் படுகாயமடைந்திருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய Alek Minassian என்ற 25 வயது நபரை பொலீஸார் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now