திரிபடைந்த புது வைரஸ்! முறியடிப்பதற்கு ஆஸ்திரேலியாவும் தயார்!

People in Johannesburg race to the airport after countries around the world restrict air travel after hearing about the new Omicron variant.

People in Johannesburg race to the airport after countries around the world restrict air travel after hearing about the new Omicron variant. Source: AAP, AP

தென்னாபிரிக்காவில் தோன்றியுள்ள திரிபடைந்த கொரோனா வைரஸ் - Omicron தொடர்பான அச்சம் உலகெங்கும் பரவியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவும் பதில் நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து பிரதமர் Scott Morrison முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவிலிருந்து வருகின்ற பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் ஒழுங்குமுறையை  நடைமுறைப்படுத்துவது  குறித்து சுகாதார அமைச்சர் Greg Hunt-டன் கலந்தாலோசனை செய்துள்ளார்.

இதையடுத்து திறக்கப்பட்டுள்ள ஆஸ்திரலிய எல்லைகளில் மீண்டும் மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரிபடைந்த புதிய வைரஸ் பரவலடையும் அச்சம் அதிகரித்துள்ள நிலையில், தென்னாபிரிக்க நாடுகளிலிருந்து திரும்பும் பயணிகளுக்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன.

தென்னாபிரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நேரடியாக எந்த விமானமும் சேவையில் ஈடுபடாவிட்டாலும் தென்னாபிரிக்கா, Lesotho, Botswana, Zimbabwe, Mozambique, Namibia, Eswatini போன்ற  நாடுலிருந்து பயணிகள், வேறு நாடுகளின் ஊடாக ஆஸ்திரேலியாவுக்கு திரும்பும்போது அவர்களுக்கான பயண மாற்றங்களை ஏற்படுத்துவது நல்லது என்று ஆஸ்திரேலிய வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது உலகளாவிய ரீதியில் வழங்கப்பட்டுவரும் கோவிட் தடுப்பூசியானது, புதிய திரிபடைந்த வைரஸ் தாக்கத்திற்கு குறைந்தளவிலேயே எதிர்ப்பு சக்தியை வழங்கவல்லது என்று தென்னாபிரிக்க வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில், இந்தப் புதிய திரிபடைந்த வைரஸ் தொடர்பில் கரிசனைகொள்ளவேண்டியுள்ளது என்பதை உலக சுகாதார நிறுவனமும் நேற்று ஏற்றுக்கொண்டிருக்கிறது.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


2 min read

Published

Updated


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now