ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில், ஸ்டீவ் ஸ்மித் Australia's men's cricketer of the year - ஆஸ்திரேலிய அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராகத் தேர்வு செய்யப்பட்டு Allan Border Medalஐப் பெற்றார். இவர் நான்கு முறை இப் பரிசை வென்ற மூன்றாவது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆவார். ரிக்கி பாண்டிங் மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகியரே முன்னதாக நான்கு முறை இப் பரிசைப் பெற்ற மற்றைய இரு வீரர்களாகும்.
இந்த ஆண்டின் women's cricketer of the year - சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக பெத் மூனி தெரிவுசெய்யப்பட்டு அவருக்கு Belinda Clark விருது வழங்கப்பட்டது. இவர் இவ்விருதினை இரண்டாவது முறையாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ஆண்டின் Shane Warne men's Test player of the year - சிறந்த ஆடவர் டெஸ்ட் வீரராக உஸ்மான் கவாஜா தேர்வு செய்யப்பட்டார்.
Australian Cricket Awards
- Belinda Clark Award: Beth Mooney
- Allan Border Medal: Steve Smith
- Women's ODI Player of the Year: Beth Mooney
- Women's T20I Player of the Year: Tahlia McGrath
- Shane Warne Men's Test Player of the Year: Usman Khawaja
- Men's ODI Player of the Year: David Warner
- Men's T20I Player of the Year: Marcus Stoinis
- Women's Domestic Player of the Year: Annabel Sutherland
- Men's Domestic Player of the Year: Michael Neser
- Betty Wilson Young Cricketer of the Year: Courtney Seppel
- Bradman Young Cricketer of the Year: Lance Morris
- Community Champion Award: Usman Khawaja
- Woolworths Cricket Blaster of the Year: Mabel Tovey
- Australian Cricket Hall of Fame inductees: Marg Jennings and Ian Redpath
2020 ஆம் ஆண்டுக்குப்பின்னர் முதன்முறையாக எந்தவொரு COVID -19 தொடர்பிலான கட்டுப்பாடுகளும் இல்லாமல் விருதுகள் வழங்கும் இரவு நடைபெற்றது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
